வட்டுக்கோட்டை பொலிஸாரின் சித்திரவதையால் உயிரிழந்த இளைஞனுடன் கைதான மற்றைய இளைஞனிடம் வாக்குமூலம் பெறவுள்ளதாக மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்துள்ளார்.
வட்டுக்கோட்டை பொலிஸாரின் சித்திரவதையில் சித்தங்கேணி பகுதியை சேர்ந்த நாகராசா அலெக்ஸ் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழுவின் விசாரணைகள் தொடர்பில் கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகிறோம். அதன் ஒரு கட்டமாக சாட்சியங்களை பதிவு செய்யும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
உயிரிழந்த இளைஞனுடன் கைது செய்யப்பட்ட மற்றைய இளைஞனிடம் வாக்குமூலம் பெறவுள்ளோம்.
அத்தோடு வேறு நபர்களிடமும் தேவைப்படும் பட்சத்தில் அவர்களின் வாக்குமூலங்களையும் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
உடற்கூற்று பரிசோதனையின் முழுமையான அறிக்கையும் இதுவரை எமக்கு கிடைக்கவில்லை என மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM