கினிகத்தேன பொலிஸ் நிலையத்திற்கருகில் உள்ள காட்டுப் பகுதியில் இன்று மதியம் இனம் தெரியாதோரால் தீ வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் பொலிஸாருடன், பிரதேசவாசிகளும் இனைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காடுகளுக்கு தீ வைப்பது குற்றச்செயலாகும், எனவே தீவைப்போர் இனங்காணப்படும் பட்சத்தில், அவர்களுக்கெதிராக தகுந்த சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கினிகத்தேன பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.