சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிக்காக சென்ற இலங்கைப் பெண் ஒருவர், அங்கு கடுமையாக துன்புறுத்தப்பட்டு இரும்பு ஆணிகளை பலவந்தமாக விழுங்க வைத்து பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில் நாடு திரும்பியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் மத்துகம பிரதேசத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் தர்ஷனி என்ற 32 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயாவார்.
இவர் துணி துவைக்கும் இயந்திர அறைக்குள் இழுத்துச் செல்லப்பட்டு அங்கு வைத்து கடுமையாக தாக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டதுடன், இரும்பு ஆணிகளை பலவந்தமாக விழுங்க வைக்கப்பட்டுள்ளமை அவர் சவூதி பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் விழுங்கிய ஆணிகள் தொண்டையில் சிக்கியதால் மூச்சுத் திணறலுக்கு உள்ளாகி சவூதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று நாடு திரும்பியுள்ளார்.
இந்நிலையில் அவர் இன்று (22) அதிகாலை 04.25 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
'நான் கடந்த செப்டெம்பர் 17 ஆம் திகதி சவூதி அரேபியாவிலுள்ள ஒரு வீட்டுக்குப் பணிப்பெண்ணாக சென்றிருந்தேன்.
அங்கு ஏற்கனவே வேலை செய்து கொண்டிருந்த பணிப்பெண் அவரது பொருட்களையும் விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளமையை அறிந்து கொண்டேன்.
நான் தினமும் அந்த வீட்டு எஜமானியால் அடித்து துன்புறுத்தப்பட்டேன். ஆனாலும் நான் அங்கு தொடர்ந்து வேலை செய்து வந்தேன்.
ஒரு நாள் அந்த வீட்டுச் சிறுவன் குளியலறையில் தலைக்கு பூசும் ஷாம்போ திரவத்தை தரையில் கொட்டியுள்ளார். இதனையடுத்து அங்கு சென்ற நான் வழுக்கி தரையில் வீழ்ந்ததில் எனது முதுகு மற்றும் தலை பலமாகக் காயமடைந்தது.
இதனால் ஓய்வெடுக்க கேட்டபோது அந்த வீட்டு எஜமானி என்னை அடித்து அறையில் பூட்டி வைத்தார். இதன் பின்னரே நான் இரும்பு ஆணிகளை விழுங்குமாறு துன்புறுத்தப்பட்டேன்.
இது குறித்து சவூதி அரேபியாவில் உள்ள எனது முகவரிடம் கூறினேன். ஆனால் அவர் என்னை திட்டிவிட்டு மீண்டும் அந்த வீட்டுக்குச் சென்று பணிபுரியுமாறு கூறினார்.
இந்நிலையில், எனது கணவரிடம் இது தொடர்பில் தெரிவித்த பின்னர் அவர் சவூதி அரேபிய தூதரகத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து என்னை மீண்டும் இலங்கைக்கு அனுப்பி வைத்தனர்' என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM