இளைய சகோதரனை கொலை செய்ய கப்பம் : மூத்த சகோதரனும் தந்தையும் கைது!

21 Nov, 2023 | 06:13 PM
image

தனது இளைய சகோதரனை கொலை செய்வதற்காக அவரது மூத்த சகோதரர் 60 ஆயிரம் ரூபா கப்பம் வழங்கிய சம்பவம்  ஹோமாகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

கத்தியால் குத்தப்பட்ட  இளைய சகோதரன் உட்பட இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், தந்தை, மகன் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்த 64 வயதுடைய தந்தை மற்றும் 21 வயதுடைய மகன் ஆவர்.

தங்களது பெற்றோரின் சொத்துக்களை சமமாகப் பகிர்ந்தளிக்காமை காரணமாக இரு சகோதரர்களுக்கும் இடையிலான  தகராறே இந்தச் சம்பவத்துக்கு காரணம் என தெரிய வருகிறது.

இளைய சகோதரர் ஹோமாகம ஹிரிபிட்டிய பிரதேசத்தில் பாடசாலை உபகரண விற்பனை நிலையமொன்றை நடத்தி வரும் நிலையில் அவர் விற்பனை நிலையத்தில் இருக்கும்போது முச்சக்கர வண்டியில் வந்த இனந்தெரியாத மூவர் அவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் அருகில் இருந்த நபர் தாக்குதலை தடுக்க முற்பட்ட போது சந்தேக நபர்கள் அவரையும் தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

இந்நிலையில் காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில்  சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வடக்கு, கிழக்கு மக்களின் மீள்குடியேற்றத்தை எதிர்வரும்...

2023-11-30 12:31:04
news-image

யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த...

2023-11-30 12:23:54
news-image

பெண்ணின் முச்சக்கர வண்டி கொள்ளை ;...

2023-11-30 11:49:48
news-image

பொலிஸ் உத்தியோகத்தர் மீது துப்பாக்கிப் பிரயோக...

2023-11-30 11:48:43
news-image

ராகம வைத்தியசாலையின் புற்றுநோயாளர் சிகிச்சைப் பிரிவுக்கு ...

2023-11-30 11:45:52
news-image

சிலாவத்துறை கடற்பரப்பில் சட்டவிரோதமாக கடலட்டைகள் பிடித்த...

2023-11-30 12:10:39
news-image

இவ் வருடத்தில் 21 ஆயிரம் மில்லியன் ...

2023-11-30 11:42:48
news-image

கொள்ளுப்பிட்டியில் சுற்றிவளைக்கப்பட்ட போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு...

2023-11-30 12:15:34
news-image

மருந்து மோசடியில் ஈடுபட்ட அமைச்சர் உள்ளே!...

2023-11-30 11:52:44
news-image

கோழி கிணற்றில் வீழ்ந்ததால் மோதல் ;...

2023-11-30 12:03:34
news-image

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க துபாய்க்கு பயணமானார்

2023-11-30 12:16:07
news-image

காங்கேசன்துறை துறைமுகத்தை பார்வையிட்டார் இலங்கைக்கான இந்தியா...

2023-11-30 11:57:48