கொரோனா பெருந்தொற்றின் போது இரண்டாவது முடக்கல்நிலை அவசியமில்லை மக்கள் உயிரிழக்கட்டும் என தற்போதைய பிரதமர் ரிசி சுனாக் தெரிவித்தார் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பிரிட்டன் கொரோனா நெருக்கடியை எவ்வாறு கையாண்டது என்பது குறித்து இடம்பெறும் விசாரணையின் போதே இந்த தகவல் வெளியாகியுள்ளது.
ரிசிசுனாக் இவ்வாறு தெரிவித்ததை பிரிட்டனின் தலைமை விஞ்ஞான ஆலோசகர் பட்ரிக் வலன்ஸ் தனது நாட்குறிப்பில் பதிவு செய்து வைத்துள்ளமையும் விசாரணைகளின் போது வெளியாகியுள்ளது.
கொரோனா பெருந்தொற்றின் பொது பிரிட்டனின் பிரதமராக பணியாற்றிய பொறிஸ்ஜோன்சன் நிதியமைச்சர் சுனாக் ஆகியோர் கலந்துகொண்ட சந்திப்பில் ரிசிசுனாக் இதனை தெரிவித்துள்ளார்.
பொறிஸ்ஜோன்சனின் சிரேஸ்ட ஆலோசகர் ஒருவர் ரிசிசுனாக் இவ்வாறு தெரிவித்தார் என வலன்சிற்கு குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் இறக்கட்டும் அது பரவாயில்லை என ரிசிசுனாக் கருதுகின்றார் இது முற்றாக தலைமைத்துவம் இல்லாமல்போய்விட்டது என்ற உணர்வை ஏற்படுத்துகின்றது என கம்மிங்ஸ் தெரிவித்தார் என வலன்ஸ் பதிவுசெய்துள்ளார்.
குறிப்பிட்ட விசாரணையில் கலந்துகொண்டு சாட்சியமளிக்கும் வேளை ரிசிசுனாக் தனது பதிலை வழங்குவார் என அவரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM