தீயை மூட்டாதீர்கள்.. தீயை அணைக்க முக்கியத்துவம் வழங்குங்கள் - மஹிந்த

21 Nov, 2023 | 08:55 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

சவால்களைப் பொறுப்பேற்று தீ மூட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல்  தீயை அணைக்கும் நடவடிக்கைகளுக்கே முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (21) இடம்பெற்ற வரவு செலவு திட்டத்தின் இரண்டம் வாசிப்பு மீதான ஏழாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

2024 வரவு செலவு திட்டம் தொடர்பில் பெருமளவு கருத்துக்கள் விவாதங்களின் போது முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினரால் கருத்துக்கள் முன்வைக்கப்படுவது வழமையாக இடம் பெறுகின்றதொன்று.

எனினும் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் நாம் தனிப்பட்ட நோக்கங்களுக்கு அப்பால் இம்முறை வரவு செலவுத் திட்டத்தை பார்ப்பது அவசியம். அவ்வாறில்லாவிட்டால் நாட்டின் முன்னேற்றம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவு திட்ட யோசனை இழக்கப்பட்டு விடும்.

அதனை கருத்திற் கொண்டு நல்லதை நல்லதாகவும் குறைகளை சுட்டிக்காட்டுவதும் இடம் பெறுவது சிறந்தது. அதற்கு ஏற்ப நாம் செயற்பட வேண்டும்.

நாட்டின் எதிர்காலத்தை சிறந்த வகையில் முன்னெடுப்பதற்கு இந்த வரவு செலவுத் திட்டம் சிறந்த வாய்ப்பாகும்.

பாராளுமன்றத்தில் தற்போது உரையாற்றும் பெருமளவிலானோர் தமது அரசாங்கம் அல்லது தாம் விரும்புகின்ற அரசாங்கம் தொடர்பில் அன்று எவ்வாறு கருத்துக்களை தெரிவித்தனர் என்பது அனைவருக்கும் தெரியும்.

அவர்களது அரசியல் நோக்கங்கள் தொடர்பில் நாட்டு மக்கள் கவனம் செலுத்துவதையும் குறிப்பிட வேண்டும்.

எமக்கு இரண்டு வழிகள் கிடையாது. நாம் எப்போதும் மக்களின் வழியிலேயே பயணிக்கின்றோம். அந்த வகையில் மக்களுக்கு பயனுள்ள வரவு செலவு திட்டத்திற்கு நாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம்.

இந்த வரவு செலவுத் திட்டத்தில் குறைகள் இல்லாமலில்லை.

அந்த வகையில் மக்களோடு இணைந்து நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டி யெழுப்புவது அவசியமாகும். அது தொடர்பான நடவடிக்கைகளுக்கு நாம் எப்போதும் ஆதரவு வழங்குவோம்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன் வைத்துள்ள இந்த வரவு செலவுத் திட்டம்

சிறந்த எதிர்காலத்தை முன் கொண்ட வரவு செலவுத் திட்டமாகும். கடந்த வருட வரவு செலவு திட்டத்தை அடிப்படையாகக் கொண்டே இம்முறை வரவு செலவுத் திட்டமும் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த தொடர்புகளை நாம் பாராட்ட வேண்டும்.

அதேபோன்று இந்த முறை வரவு செலவுத் திட்டத்தில் நிதியொழுக்கம் காணப்படுகிறது. அது நாட்டிற்கு மிகவும் அவசியமானது. ஐந்து வருடங்களுக்கு அந்த நிதி ஒழுக்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு பெரும் பிரயத்தனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும்  அதனை விமர்சித்து மக்களை தூண்டி விடுவதற்கு சிலர் முயற்சிக்கின்றார்கள். அவ்வாறு செயல்படுவதால் நாட்டுக்கோ மக்களுக்கோ எந்த பயனும் கிடைக்கப் போவதில்லை.

தற்போது சர்வதேச நாணய நிதியத்தைப் பார்க்கும் போது அந்த நிறுவனம் முறையான வரைபுடனான வேலைத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. அந்த கடன் தொடர்பில் அந்த நிறுவனம் நாட்டிற்கு வழங்கியுள்ள யோசனைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

விமர்சனங்களை மட்டும் முன்வைத்து அடுப்பிலிருந்து நெருப்பில் விழும் நிலைமையை  தோற்றுவிக்கக் கூடாது. வரலாறு முழுவதும் விமர்சனங்களை மட்டுமே முன்னெடுத்தவர்கள் அவர்கள் மட்டுமே சரி என்பதையே குறிப்பிடுகிறார்கள்.

அவர்கள் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ள முன் வருபவர்கள் அல்ல. அதற்கான சந்தர்ப்பத்தையும் தவற விட்டவர்கள்.

வாழ்க்கைச் செலவு வெகுவாக அதிகரித்துள்ளது என்பதை நாம் அறிவோம். அதனால் மக்கள் பாதிப்படைவதை எவரும் விரும்ப மாட்டார்கள். எனினும் இந்த நிலைமையை சரி செய்வதற்கு அரசாங்கத்தில் சிறந்த திட்டம் உள்ளது. 

இந்த வரவு செலவு திட்டத்தில் நாட்டின் பல்வேறு துறைகளையும் முன்னேற்றும் சிறந்த யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காத்தான்குடியில் சந்தேகத்தில் கைதான 30 பேரும்...

2024-03-02 01:12:34
news-image

மக்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்குவதை ஏற்க முடியாது...

2024-03-02 00:04:10
news-image

14 வருடங்களாகத் தொடரும் கிழக்குத் தமிழர்களின்...

2024-03-01 23:15:08
news-image

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர்...

2024-03-01 21:58:30
news-image

அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த இடமளிக்கப்போவதில்லை...

2024-03-01 13:36:14
news-image

நீருக்கு வரி அறவிடப்படமாட்டாது - பவித்ரா...

2024-03-01 13:31:26
news-image

பாதசாரி கடவைக்கு அண்மித்த பகுதியில் வீதியை...

2024-03-01 20:11:47
news-image

திருகோணமலை டொக்கியாட் கடற்கரையில் அடையாளம் தெரியாத...

2024-03-01 20:00:40
news-image

நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது சாந்தனின் பூதவுடல்; நீர்கொழும்பில்...

2024-03-01 19:56:04
news-image

சாந்தன் சொந்த நாட்டுக்கு திரும்புவதில் ஏற்பட்ட...

2024-03-01 18:49:43
news-image

இந்து சமுத்திரத்திற்குள் நாட்டின் பொருளாதாரத் திட்டங்களுக்குப்...

2024-03-01 17:52:47
news-image

யாழ். போதனா வைத்தியசாலை சூழலில் தரித்து...

2024-03-01 17:48:58