மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள மாவீரர் துயிலுமில்லங்கள் பொதுமக்களின் பங்கேற்புடன் சிறந்த முறையில் சிரமதானங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் மாவடிமுன்மாரி மாவீரர் துயிலுமில்லம், மற்றும் தரவை மாவீரர் துயிலுமில்லம், போன்ற துப்பரவு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் 27 ஆம் திகதி மாவீரர் தினத்தை அனுஸ்ட்டிப்பதற்காக தற்போது நாம் பொதுமக்களின் பங்கேற்புடன் சிரமதானப்பணிகளை முன்னெடுத்து துயிலுமில்லைத்தை அலங்கரிக்கும் வேலத்திட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றோம். மாவீரர் துயிலுமில்லத்தின் துப்பரவுப்பணிகள் 95 வீதமான வேலைகள் முடிவுறுத்தப்பட்டுள்ளன.
வருடா வருடம் நாம் இப்பணியை மேற்கொண்டு வருவது வழமை அதுபோல் இவ்வருடமும் இச்செயற்பாட்டை சிறப்பான முறையில் முன்னெடுத்து வருகின்றோம். எனவே மக்கள் எதுவித அச்சமுமின்றி தமது மாவீரச் செல்வங்களுக்காக விளக்கேற்றலாம்.
மாவட்டத்திலுள்ள சகல துயிலுமில்லங்களிலும் சிரமதானப் பணிகள் எமது செயற்பாட்டாளர்கள், மற்றும் பொதுமக்களின் ஒதுத்ழைப்புடன், முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர். இதன்போது இளைஞர்கள் மிகவும் எழுச்சியுடன் இச்செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்புக்களை நல்கி வருகின்றார்கள். என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசி அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM