கிரிக்கெட்டுக்காக ஒன்றுப்பட்டதைப் போன்று இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண ஒன்றுபடுங்கள் - அங்கஜன் இராமநாதன் அழைப்பு

21 Nov, 2023 | 04:53 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினை தற்போதைய நிலைக்கு மூல காரணம் என்பதை எவரும் மறுக்க முடியாது.

13 ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதியிடம் பல கட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டோம்.பேச்சுவார்த்தையின் அடுத்தக்கட்டம் என்ன ? கிரிக்கெட்டுக்கு ஒன்றுப்பட்டதை போன்று இனப்பிரச்சினைக்கு தீர்வு காண ஆளும்,எதிர்தரப்பு ஒன்றுபட வேண்டும் என பாராளுமன்ற  குழுக்களின் பிரதி தலைவர் அங்கஜன் இராமநாதன் சபையில் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (21) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

பொருளாதார மீட்சிக்கான திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ள பின்னணியில் 2024 ஆம் ஆண்டுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

வரி அடையாள அட்டையை அமுல்படுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது.ஆனால் அது வெற்றிகரமாக செயற்படுத்தப்பட வேண்டும்.

வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள பாலியாறு திட்டம் கவனத்தை ஈர்த்துள்ளது.

யாழ் மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்குமாறு கடந்த ஆறு தசாப்தகாலமாக வலியுறுத்தி வருகிறோம்.பாலியாறு திட்டத்தினால் சுமார் 6 இலட்சத்து 50 ஆயிரம் பேர் பயனடைவார்கள்.

அத்துடன் 41.2 எம்.சி.குடி நீருக்காகவும்,4.7 எம்.சி. விவசாய நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்த முடியும்.

இந்த திட்டத்துக்காக ஆரம்பக்கட்டமாக 250 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.கடந்த காலங்களில் யாழுக்கு நதி திட்டத்துக்கு 2000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது.ஆனால் அந்த திட்டம் செயற்படுத்தப்படவில்லை.

ஆகவே தற்போது ஒதுக்கப்பட்டுள்ள 250 மில்லியன் ரூபா நடைமுறைக்கு சாத்தியமாகுமா? திட்டம் வெற்றிப்பெறுமா? என்ற சந்தேகம் காணப்படுகிறது.

பாலியாறு போன்ற மாபெரும் திட்டத்துக்கு 250 மில்லியன் ரூபா போதுமானதல்ல ஆகவே இந்த முன்மொழிவும் வெறும் கண்துடைப்பு என்று எம் மக்கள் குறிப்பிடுகிறார்கள்.

அதேபோல் கடல் நீரை சுத்திகரிக்கும் திட்டம் தாளையடியில் ஆரம்பிக்கப்பட்டது.அந்த திட்டத்துக்கு என்னவாயிற்று.இந்த பாலியாறு திட்டத்தினால் தாளையடி திட்டம் கைவிடப்படுமா என்ற சந்தேகம் காணப்படுகிறது.

சுமார் 60 வருடகாலமாக தவித்த தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்காமல் இருக்கின்றீர்களே, இதற்கு நீங்கள்  அனைவரும் வெட்கப்பட வேண்டும்.

மறுபுறம் பூ நகரியில் சுற்றுலா அபிவிருத்திக்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.இது மகிழ்ச்சிக்குரியது.ஆனால் பூ நகரியில் கௌதாரிமுனையை வெளிநாட்டு நிறுவனத்துக்கு முழுமையாக தாரைவார்க்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆகவே இந்த அபிவிருத்தி  திட்டங்களால் மக்களுக்கு என்ன பயன்,வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு அபிவிருத்திகளை கொண்டு செல்கிறோம் என்று சர்வதேசத்துக்கு திரைப்படம் காண்பிக்கப்படுகிறது.

பாதீடு என்பது தேர்தலுக்கான விஞ்ஞாபனம்  என்று மக்கள் குறிப்பிடுகிறார்கள்.சம்பள அதிகரிப்பை அறிவித்து விட்டு மறைமுகமாக பொருட்களின் விலையேற்றத்தை வரவு செலவுத் திட்டம் கொண்டுள்ளது.

வரவுக்கு மேலதிகமாக செலவுகள் காணப்படுகின்றன.இன முரண்பாடுகள் தற்போதைய நிலைக்கு காரணம் என்பதை எவராலும் மறுக்க முடியாது.பிரச்சினையின் ஆணிவேராக காணப்படும் இனப்பிரச்சினைக்கு தீர்வு என்ன ?

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி எம்முடன் பல கட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தார்.காணி விடுவிடுப்பு,மீள்குடியேற்றம் உள்ளிட்ட 15 அம்சங்கள் தொடர்பில் அடுத்தக்கட்ட தீர்வு என்ன கடந்த 15 ஆண்டுகாலமாக நிலங்கள் இணைக்கப்பட்டுள்ளனவே,தவிர மனங்கள் இணைக்கப்படவில்லை.

மக்களின் பங்களிப்பு இல்லாமல் ஒருபோதும் முன்னேற்றத்தை எதிர்பார்க்க முடியாது.

நாட்டின் கிரிக்கெட் துறை தொடர்பில் 225 உறுப்பினர்களும் விசேட கவனம் செலுத்தினார்கள்.

கிரிக்கெட்டை பாதுகாக்க ஆளும் மற்றும் எதிர்தரப்பினர் ஒன்றிணைந்தார்கள்.கிரிக்கெட்டுக்கு ஒன்றிணைந்ததை போன்று இனப்பிரச்சினைக்கு தீர்வு காணவும் அனைவரும் ஒன்றுப்பட வேண்டும்.அதற்கான காலம் தோற்றம் பெற்றுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புத்தசாசனம், தொல்பொருள் திணைக்கள செயற்பாடுகளே நல்லிணக்கத்துக்கு...

2023-12-06 19:49:32
news-image

மோசடி இடம்பெற்றுள்ளதை உறுதிப்படுத்தினால் பதவி விலகுவதாக...

2023-12-06 19:52:54
news-image

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை : 3...

2023-12-06 19:55:54
news-image

இறந்த நிலையில் மூன்று கடலாமைகள் மீட்பு

2023-12-06 20:22:08
news-image

மலையக ரயில் சேவைகள் தாமதம்

2023-12-06 16:57:59
news-image

வாள் உற்பத்தியாளர்களை  கைது செய்து சட்ட...

2023-12-06 16:46:21
news-image

சர்வதேச எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு மன்னாரில்...

2023-12-06 16:24:13
news-image

மூவரின் உயிரிழப்புக் காரணமான தனியார் பஸ்...

2023-12-06 16:17:51
news-image

தமிழர்களிற்கு சுயநிர்ணய உரிமை அவசியம் -...

2023-12-06 16:15:49
news-image

பரிசுப் பொருட்கள் மற்றும் கடன் வழங்குவதாக...

2023-12-06 16:42:40
news-image

ஹரக்கட்டாவின் மனுவை தள்ளுபடி செய்த மேன்முறையீட்டு...

2023-12-06 15:44:54
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2023-12-06 15:35:11