இலத்திரனியல் ஊடகங்களுக்கு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுச் சட்டம் - அரசாங்கம்

21 Nov, 2023 | 04:46 PM
image

(எம்.மனோசித்ரா)

இலத்திரனியல் ஊடகங்களுக்கான ஒலி/ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுச் சட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பேச்சுச் சுதந்திரம் மற்றும் கருத்துத் தெரிவிக்கும் சுதந்திரத்தை உரிய வகையில் பாதுகாத்து சிறந்த ஊடகத்துறையை உறுதிப்படுத்தும் நோக்கில் இலத்திரனியல் ஊடகங்களுக்கான ஒலி/ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுச் சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக சட்டமூலமொன்றை தயாரிப்பதற்காக வெகுசன ஊடக அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனை இன்று செவ்வாய்க்கிழமை (21) இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அங்கு, முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலத்தைத் தயாரிக்கும் போது கவனம் செலுத்த வேண்டிய கொள்கை ரீதியான விடயங்கள் பற்றி பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் தலைமையில் அமைச்சரவை உபகுழுவொன்று உருவாக்கப்பட்டதுடன், குறித்த குழுவால் முன்மொழியப்பட்டுள்ள ஒலி/ஒளிபரப்பு ஆணைக்குழுச் சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கு அடிப்படையாகக் கொள்வதற்காக பொருத்தமான ஏற்பாடுகளுடன் கூடிய அடிப்படைச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆரம்ப வரைபின் அடிப்படையில் சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மலையக ரயில் சேவைகள் தாமதம்

2023-12-06 16:57:59
news-image

வாள் உற்பத்தியாளர்களை  கைது செய்து சட்ட...

2023-12-06 16:46:21
news-image

சர்வதேச எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு மன்னாரில்...

2023-12-06 16:24:13
news-image

மூவரின் உயிரிழப்புக் காரணமான தனியார் பஸ்...

2023-12-06 16:17:51
news-image

தமிழர்களிற்கு சுயநிர்ணய உரிமை அவசியம் -...

2023-12-06 16:15:49
news-image

பரிசுப் பொருட்கள் மற்றும் கடன் வழங்குவதாக...

2023-12-06 16:42:40
news-image

ஹரக்கட்டாவின் மனுவை தள்ளுபடி செய்த மேன்முறையீட்டு...

2023-12-06 15:44:54
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2023-12-06 15:35:11
news-image

எட்கா குறித்த பேச்சுவார்த்தைகளை மார்ச்சில் நிறைவு...

2023-12-06 16:49:08
news-image

கடுகண்ணாவ வைத்தியசாலையில் சுவரொன்று வீழ்ந்து பணியாளர்...

2023-12-06 15:18:09
news-image

கொழும்பு பாதுகாப்பு பேரவை உடன்படிக்கையில் கையெழுத்திட...

2023-12-06 15:09:10
news-image

நாணய நிதியத்திடமிருந்து இரண்டாம் கட்ட கடன்...

2023-12-06 16:48:26