(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும். அதற்கான நடவடிக்கைகள் முடிவடையும் நிலையில் இருக்கின்றன என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (21) இடம்பெற்ற வரவு செலவு திட்டத்தின் இரண்டம் வாசிப்பு மீதான ஏழாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இன்னும் சில தினங்களில் வெளியிட இருக்கின்றோம். அதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் முடியும் தறுவாயில் இருக்கின்றன. அத்துடன் நாங்கள் இந்த முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வரலாற்றில் முதல் தடவையாக ஒருமாத காலத்தில் வெளியிட நடவடிக்கை எடுத்தோம்.
அதேநேரம் கல்வி பொதுத் தராதர உயர் தரபரீட்சையை நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் படுத்தி முடித்திருக்கிறோம்.
கடந்த வருட உயர்தர பரீட்சை பெறுபேறுகள் விடைதாள் பதிப்பிடும் நடவடிக்கை பிற்படுத்தப்பட்டதால் 3மாதங்கள் வரை பிற்படுத்தப்பட்டது. அவவ்வாறு இல்லாவிட்டால் உயர் தர பரீட்சை இந்த மாதம் ஆரம்பிக்கவே தீர்மானித்திருந்தோம்.
அத்துடன் நாடு பொருளாதார நெருக்கடியில் இருக்கின்றபோதும் தற்போது படிப்படியாக ஸ்திர நிலைக்கு வருகிறது. அதனால் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் நாங்கள் பாடசாலைகளுக்கான அச்சுப்புத்தகங்களுக்காக 19 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
அச்சுப்புத்தகம் அச்சிடும் நடவடிக்கை தற்போது முடிவடையும் நிலையில் இருக்கிறது ஜனவரியாகும் போது அனைத்து பாடசாலைகளுக்கும் அச்சுப்புத்தகம் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் 8இலட்சம் மாணவர்களுக்கு பாதணி வழங்குவதற்காக பண வவுச்சர் வழங்க தீர்மானித்திருக்கிறோம். அதேபோன்று ஆரம்ப பிரிபு மாணவர்களுக்கு பகல் உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதற்காக 16 பில்லியன் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM