(எம்.மனோசித்ரா)
ஆறு மாதம் தொடக்கம் மூன்று வயது வரையான பிள்ளைகளுக்கு திரிபோஷ உள்ளிட்ட மேலதிக உணவுத்திட்டத்திற்கான அப்லோடொக்சின் தடைதாண்டல் மட்டத்தைத் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
சுகாதார அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் மகப்பேறு மற்றும் சிறுவர் ஆரோக்கியம் தொடர்பான வேலைத்திட்டத்தின் கீழ் 06 மாதம் தொடக்கம் 05 வயது வரை குறைந்த போசாக்குடைய பிள்ளைகளுக்கு மேலதிக உணவாகவும், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு மேலதிகப் போசாக்குப் பதார்த்தமாக திரிபோஷ வழங்கப்பட்டு வருகின்றது.
ஆனாலும், 1980 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க உணவுச் சட்டத்தின் கீழ் காணப்படும் ஒழுங்குவிதிகளில் விதிக்கப்பட்டுள்ள இறுக்கமான அப்லோ டொக்சின் தடைதாண்டல் மட்டம் காரணமாக திரிபோஷ உற்பத்திக்குத் தேவையான சோளத்தைப் பெற்றுக் கொள்வதில் சிரமங்கள் உள்ளன.
அதனால், சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள அப்லோ டொக்சின் மட்டமான பீ1 வகைக்கான 5 பி.பி.பீ மட்டத்தை ஒட்டுமொத்த அப்லோ டொக்சின் மட்டத்தை 10 ஆக ஏற்புடையதாக்கிக் கொள்வதற்கு சுகாதார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM