(எம்.வை.எம்.சியாம்)
தரமற்ற இம்யுனோகுளோபுலின் மருந்துகள் கொள்வனவுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோக பிரிவின் பணிப்பாளர் உட்பட 4 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நேற்றுமுன்தினம் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 29 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவ விநியோகப்பிரிவின் பணிப்பாளர், உதவிபணிப்பாளர், கணக்காய்வாளர் மற்றும் கட்டுப்பாட்டாளர் ஆகியோரே குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தனர்.
தரமற்ற 22,500 இம்யுனோகுளோபுலின் மருந்துகளை கொள்வனவு செய்து மருத்துவ விநியோகப் பிரிவுக்கு வழங்கிய சம்பவம் தொடர்பில் முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது. குற்றப்புலனாய்வு பிரிவினர் இது தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்த நிலையிலேயே சந்தேகநபர்கள் செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்திருந்தார்.
ஏற்கனவே இம்மருந்துகளை உற்பத்தி செய்து விநியோகத்தில் இருந்த தனியார் நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் வைத்தியர் விஜித குணசேகர, மருத்துவ விநியோகப் பிரிவு பணிப்பாளர் வைத்தியர் கபில விக்கிரமநாயக்க மற்றும் மருந்துகளை கொள்வனவு செய்த நிறுவன உரிமையாளர் சுகத் ஜனக்க பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக மாளிகாகந்த நீதிமன்றத்தினால் வெளிநாட்டு பயணத்தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM