நயன்தாராவை இயக்குகிறார் அருண்!

21 Nov, 2023 | 04:44 PM
image

‘ஜவான்’ அதிரிபுதிரி வெற்றியடைந்ததையடுத்து, நயன்தாராவுக்கு பொலிவுட்டில் அனேக கிராக்கி. என்றாலும், தனது இரண்டு குழந்தைகளுடனான தனது நேரத்தைத் தொந்தரவு செய்யாத வண்ணம் இருப்பதற்காக, மிக நிதானமாக படங்களைத் தெரிவுசெய்து வருகிறார் நயன்.

தற்போது, அவரது நடிப்பில் உருவான ‘த டெஸ்ட்‘ மற்றும் ‘மண்ணாங்கட்டி‘ ஆகிய படங்கள் வெளியீட்டுக்காகக் காத்திருக்கின்றன. த டெஸ்ட் படத்தில், முதன்முறையாக மாதவனுடன் இணைந்திருக்கிறார் நயன்தாரா.

இந்த நிலையில்தான், நயன்தாரா தனது அடுத்த படத்துக்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அதன்படி, நயன்தாரா நடிக்கும் அடுத்த படத்தை, ‘கனா’ இயக்குனர் அருண்ராஜா காமராஜா இயக்குகிறார். ப்ரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்