விஜய் – நலன் ஹெட்ரிக் !

21 Nov, 2023 | 02:25 PM
image

‘சூது கவ்வும்’ மற்றும் ‘காதலும் கடந்து போகும்’ போன்ற வெற்றிப்படங்கள் இயக்கிய இயக்குனர் நலன் குமாரசாமி, மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைவது உறுதியாகியிருக்கிறது. 

விஜய் சேதுபதி தவிர, மேலும் மூன்று தலைசிறந்த நட்சத்திரங்களும் இந்தப் படத்தில் இணையலாம் என்று தெரியவருகிறது.

கார்த்தியின் நடிப்பில் உருவாகிவரும் படம் ஒன்றை ஸ்டூடியோ கிறீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தை நலன் குமாரசாமி இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தில், நலனின் பணிகளில் திருப்தியடைந்த தயாரிப்பு தரப்பு, இயக்குனரின் அடுத்த படத்தையும் தயாரிக்க முன்வந்திருக்கிறது.

இந்த நிலையில்தான், விஜய் சேதுபதிக்காக ஒரு கதை எழுதியிருப்பதாகக் கூறிய நலன், தயாரிப்பு தரப்பு விரும்பினால் அந்தக் கதையை இயக்கலாம் என்று கூறியிருக்கிறார்.

அதற்கு ஸ்டூடியோ கிரீன் சம்மதிக்கவே, உடனடியாக இந்தப் படம் குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று, விஜய் சேதுபதியின் சம்மதமும் பெறப்பட்டுவிட்டது. 

விஜய் சேதுபதிக்கு நிகரான மற்ற மூன்று கதாபாத்திரங்களுக்கு மூன்று தலைசிறந்த நட்சத்திரங்களைத் தெரிவு செய்யவிருப்பதாக நலன் குமாரசாமி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right