போராட்டத்தின் ஊடாக மக்கள் கற்பித்த பாடத்தை ஆளும் தரப்பு இன்றும் கற்றுக்கொள்ளவில்லை - கபீர் ஹாசிம்

21 Nov, 2023 | 04:28 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

போராட்டத்தின் ஊடாக  நாட்டு மக்கள் கற்றுக் கொடுத்த பாடத்தை ஆளும் தரப்பு இன்றும் கற்றுக்கொள்ளவில்லை. பொருளாதார படுகொலையாளிகளை உயர்நீதிமன்றம் அடையாளப்படுத்தியுள்ள நிலையில் அவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

சட்டவாட்சி கோட்பாடு முறையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (21) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

ஊழல்வாதிகளை தண்டிக்க வேண்டும், மோசடி செய்யப்பட்ட  அரச நிதியை அரசுடமையாக்க வேண்டும் என நாட்டு மக்கள் போராட்டத்தில்  வலியுறுத்தினார்கள்.

போராட்டத்தில் இருந்து ஆளும் தரப்பின் இன்றும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை. எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தி ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.

பொருளாதார பாதிப்புக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் நாங்கள் பலமுறை வலியுறுத்தினோம்.

ஆனால் மோசடியாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் தற்றுணிவு ஜனாதிபதிக்கு இல்லை. ஆனால் உயர்நீதிமன்றம் தற்றுணியுடன் பொருளாதார படுகொலையாளிகளை  பகிரங்கப்படுத்தியுள்ளது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ஆளும் தரப்பினர் ஏற்க மறுக்கிறார்கள்.

பொருளாதார படுகொலையாளிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள தரப்பினருக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கை என்ன? சட்டவாட்சி கோட்பாடு சகல தரப்பினருக்கும் சமமாக நடைமுறைப்படுத்த வேண்டும்  என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்.

2021.12.10 ஆம் திகதி  2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான விவாதத்தில் உரையாற்றிய போது அப்போதைய நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவிடம் நாட்டின் வெளிநாட்டு கையிறுப்பு 1.4 பில்லியனாக குறைவடைந்துள்ளது.

அடுத்த ஆண்டு 7.2 பில்லியன்  டொலர் கடன் செலுத்த வேண்டும். வெளிநாட்டு கையிறுப்பை அதிகரித்துக் கொள்வதற்கும், கடன் செலுத்துவதற்கும் அரசாங்கத்திடம்  உள்ள திட்டங்கள் என்ன என்று கேள்வியெழுப்பினேன்.

இதற்கு பதிலளித்த அப்போதைய நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ ' வெளிநாட்டு கையிறுப்பு  மற்றும் வெளிநாட்டு கடன் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்பதை பொறுப்புடன் குறிப்பிட்டுக் கொள்கிறேன் ' என்று குறிப்பிட்டார். ஆனால் நாடு வங்குரோத்து நிலையடையும் வரை எவ்விதமான பொருளாதார திட்டங்களும் சபைக்கு சமர்ப்பிக்கப்படவில்லை.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தில் தேசிய வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்கு எவ்வித திட்டங்களும்  சமர்ப்பிக்கப்படவில்லை.

மாறாக வரி அதிகரிப்பதையும்,தேசிய வளங்களை விற்பதையும்  பிரதான கொள்கையாக கொண்டுள்ளது.அடுத்த ஆண்டு முதல் வற் வரியை அதிகரிப்பதற்கு  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய தரப்பினருக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையில் நாட்டு மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் வரி விதிப்பை அதிகரிப்பது முற்றிலும் முரணானது.

சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தினால் ஏற்படும் போகும்  முரண்பாடுகளுக்கு அரசாங்கம் எவ்வாறு தீர்வுகளை முன்வைக்கும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மலையக ரயில் சேவைகள் தாமதம்

2023-12-06 16:57:59
news-image

வாள் உற்பத்தியாளர்களை  கைது செய்து சட்ட...

2023-12-06 16:46:21
news-image

சர்வதேச எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு மன்னாரில்...

2023-12-06 16:24:13
news-image

மூவரின் உயிரிழப்புக் காரணமான தனியார் பஸ்...

2023-12-06 16:17:51
news-image

தமிழர்களிற்கு சுயநிர்ணய உரிமை அவசியம் -...

2023-12-06 16:15:49
news-image

பரிசுப் பொருட்கள் மற்றும் கடன் வழங்குவதாக...

2023-12-06 16:42:40
news-image

ஹரக்கட்டாவின் மனுவை தள்ளுபடி செய்த மேன்முறையீட்டு...

2023-12-06 15:44:54
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2023-12-06 15:35:11
news-image

எட்கா குறித்த பேச்சுவார்த்தைகளை மார்ச்சில் நிறைவு...

2023-12-06 16:49:08
news-image

கடுகண்ணாவ வைத்தியசாலையில் சுவரொன்று வீழ்ந்து பணியாளர்...

2023-12-06 15:18:09
news-image

கொழும்பு பாதுகாப்பு பேரவை உடன்படிக்கையில் கையெழுத்திட...

2023-12-06 15:09:10
news-image

நாணய நிதியத்திடமிருந்து இரண்டாம் கட்ட கடன்...

2023-12-06 16:48:26