வட்டுக்கோட்டை இளைஞன் உயிரிழப்பு : 3 பொலிஸ் உயர் அதிகாரிகள் விசாரணை களத்தில்

Published By: Digital Desk 3

21 Nov, 2023 | 04:26 PM
image

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஒரு சிலரால் மேற்கொள்ளப்பட்டுள்ள விரும்பத்தகாத செயற்பாடு தொடர்பில் மூன்று பொலிஸ் உயர் அதிகாரிகள் அடங்கிய விசாரணை குழுவினால், விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக யாழ்ப்பாணம் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மஞ்சுள ஜெனரத் தெரிவித்துள்ளார்.

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த நாகராசா அலெக்ஸ்  எனும் இளைஞன் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்காக யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர், காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் மேலும் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி அடங்கிய குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணைகளின் அடிப்படையில் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் நான்கு உத்தியோகத்தர்கள் குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளார்கள் என இனங்காணப்பட்டதன் அடிப்படையில் அவர்கள் நால்வரும் தற்பொழுது மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் கட்டுப்பாட்டில் உள்வாங்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

விரைவில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்.

அதேவேளை, இந்த விடயம் தொடர்பில் பொலிஸ்மா அதிபரினாலும் எமக்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், தற்பொழுது வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய நான்கு உத்தியோகத்தர்கள் இடமாற்றப்பட்டுள்ளார்கள்.

அவர்கள் அங்கு கடமையாற்றினால், அங்குள்ள ஆவணங்கள் மற்றும் சாட்சிகளை அழித்து விடுவார்கள் என்ற காரணத்தினால் அவர்களை இடம் மாற்றி விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்கள்.

எனவே, இந்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் குழப்பமடையத் தேவையில்லை.  பொலிஸ் உயர் மட்டத்தில் விசாரணைகளை விரைவாக செயற்படுத்துமாறு பணித்துள்ளோம் என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உடல் உறுப்புகளுக்கும் வரி விதிக்கப்படலாம் -...

2023-12-06 19:50:59
news-image

யாரோ ஒருவரது தூண்டுதலிலேயே எனது பேச்சை...

2023-12-06 20:29:42
news-image

புத்தசாசனம், தொல்பொருள் திணைக்கள செயற்பாடுகளே நல்லிணக்கத்துக்கு...

2023-12-06 19:49:32
news-image

மோசடி இடம்பெற்றுள்ளதை உறுதிப்படுத்தினால் பதவி விலகுவதாக...

2023-12-06 19:52:54
news-image

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை : 3...

2023-12-06 19:55:54
news-image

இறந்த நிலையில் மூன்று கடலாமைகள் மீட்பு

2023-12-06 20:22:08
news-image

மலையக ரயில் சேவைகள் தாமதம்

2023-12-06 16:57:59
news-image

வாள் உற்பத்தியாளர்களை  கைது செய்து சட்ட...

2023-12-06 16:46:21
news-image

சர்வதேச எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு மன்னாரில்...

2023-12-06 16:24:13
news-image

மூவரின் உயிரிழப்புக் காரணமான தனியார் பஸ்...

2023-12-06 16:17:51
news-image

தமிழர்களிற்கு சுயநிர்ணய உரிமை அவசியம் -...

2023-12-06 16:15:49
news-image

பரிசுப் பொருட்கள் மற்றும் கடன் வழங்குவதாக...

2023-12-06 16:42:40