காலநிலை அனர்த்தங்களுக்கான உடனடித் தீர்வுகளைச் செயற்படுத்த வேண்டியது அவசியம் - இலங்கை பசுமை ஹைட்ரஜன் மாநாட்டில் ஜனாதிபதி

21 Nov, 2023 | 12:26 PM
image

2030 ஆம் ஆண்டளவில் 1.5 செல்சியஸினால் உலக வெப்பநிலையை மட்டுப்படுத்தவதற்குத் தேவையான இலக்குகளுடன்,  காலநிலை அனர்த்தங்களுக்கான உடனடித் தீர்வுகளைச் செயற்படுத்த வேண்டியது அவசியமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

இலங்கைப் பெற்றோலிய அபிவிருத்தி அதிகார சபை (PDASL) ஐக்கிய அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி முகவர் நிறுவனமான USAID உடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இலங்கை பசுமை ஹைட்ரஜன் மாநாடு - 2023 இன்று (21) கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் ஆரம்பமானது. 

இந்த மாநாட்டில் மின்சக்தி, வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் இலங்கை தேசிய ஹைட்ரஜன் வழிகாட்டல் வரைவு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,

2023 ஆம் ஆண்டிற்கான ஐக்கிய நாடுகளின் தீர்வுகளுக்கான அறிக்கையில் அபிவிருத்தி அடைந்த நாடுகள் அளித்த வாக்குறுதிகள் மீறப்பட்டுள்ளதுடன்,  இந்த நூற்றாண்டின் இறுதியில் உலக வெப்பநிலை 3 செல்சியஸால் உயர்வடையக்கூடும். 2030 ஆம் ஆண்டளவில் 1.5 செல்சியஸினால் உலக வெப்பநிலையை மட்டுப்படுத்தவதற்குத் தேவையான இலக்குகளுடன்,  காலநிலை அனர்த்தங்களுக்கான உடனடித் தீர்வுகளைச் செயற்படுத்த வேண்டியது அவசியமென ஜனாதிபதி ரணில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

எரிசக்தி திட்டங்கள் தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளும் போது, பொருளாதார காரணிகள், விலை மற்றும் நீண்ட கால தாக்கங்களைக் கருத்தில் கொண்டு, அனைத்து விடயங்கள் தொடர்பிலும் ஆழமான தெரிவுடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அந்தத் தீர்மானங்களை மேற்கொள்ளும் போது வழிகாட்டலுக்கான வலுசக்தி மாற்ற சட்டம் மற்றும் பல் நிபுணத்துவக் குழுவொன்றை நியமிப்பதற்கான யோசனையும் முன்வைத்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிலாவத்துறை கடற்பரப்பில் சட்டவிரோதமாக கடலட்டைகள் பிடித்த...

2023-11-30 12:05:13
news-image

இவ் வருடத்தில் 21 ஆயிரம் மில்லியன் ...

2023-11-30 11:42:48
news-image

மருந்து மோசடியில் ஈடுபட்ட அமைச்சர் உள்ளே!...

2023-11-30 11:52:44
news-image

கோழி கிணற்றில் வீழ்ந்ததால் மோதல் ;...

2023-11-30 12:03:34
news-image

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க துபாய்க்கு பயணமானார்

2023-11-30 11:51:48
news-image

காங்கேசன்துறை துறைமுகத்தை பார்வையிட்டார் இலங்கைக்கான இந்தியா...

2023-11-30 11:57:48
news-image

தேசபந்துதென்னக்கோன் நியமனம் - உயிர்த்த ஞாயிறு...

2023-11-30 11:20:31
news-image

களனி கங்கையில் வீழ்ந்து பொலிஸ் உத்தியோகத்தர்...

2023-11-30 11:19:30
news-image

மன்னார் பொது வைத்தியசாலைக்கு விஜயம் செய்தார்...

2023-11-30 11:47:46
news-image

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திடமிருந்து திறைசேரிக்கு...

2023-11-30 11:12:34
news-image

வடகிழக்கு ஊடகவியலாளர்களுக்கு தொடர் அச்சுறுத்தல் :...

2023-11-30 11:49:14
news-image

மண்மேடு சரிந்த வீழ்ந்து எல்ல -...

2023-11-30 10:50:53