கொழும்பு ரோயல் கல்­லூ­ரிக்கும் கல்­கி ஸ்சை புனித தோமையார் கல்­லூ­ரிக்கும் இடை­யி­லான நீலங்­களின் சமர் என அழைக்­கப்படும் 138 ஆவது கிரிக்கெட் போட்டி எதிர்­வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை கொழும்பு எஸ்.எஸ்.சீ. மைதா­னத்தில் நடை­பெ­ற­வுள்­ளது.

இதற்கான பிரதான அனுசரணையாளராக டயலொக் ஆக்ஷியாட்டா செயற்படுகின்றது.

இதற்கான உத்தியோகபூர்வ ஊடகவியலாளர் மாநாடு நேற்று புதன்கிழமை கொழும்பிலுள்ள விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, இரு கல்லூரிகளின் அதிபர்கள், டயலொக் ஆக்ஷியாட்டா குழுமத்தின் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி, மற்றும் இரு கல்லூரிகளின் ஆசிரியர்கள், வீரர்கள், மணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நீண்­ட­கால வர­லாற்றைக் கொண்ட 'ரோயல் – தோமியன்' கிரிக்கெட் போட்டி 1880 ஆம் ஆண்டு ஆரம்­பிக்­கப்­பட்­ட­துடன் உலக கிரிக்கெட் வர­லாற்றில் நீண்­ட­கா­ல­மாக இடை­ வி­டாது நடத்­தப்­பட்டுவரும் பாரம்­ப­ரி­ய­மிக்க கிரிக்கெட் போட்­டிகளில் 2 ஆவது இடத்திலுள்ளது.

இரு கல்லூரிகளுக்குமிடையில்  கடந்த 1880 ஆம் ஆண்டு இடம்பெற்ற முதலாவது நீலங்களின் கிரிக்கெட் போட்டியானது காலிமுகத்திடலில்  தற்போது தாஜ் சமுத்திரா ஹோட்டல் அமைந்துள்ள இடத்தில்  இடம்பெற்றுள்ளது.

 

இவ்­விரு கல்­லூ­ரி­க­ளி­னதும் உத்­தி­யோ­க­பூர்வ வர்ணம் நீல நிற­மாகக் காணப்­ப­டு­வதால் நீலங்­க­ளுக்­கி­டை­யி­லான சமர் என இது வர்ணிக்கப்படுகின்றது.

இவ்­விரு அணி­க­ளுக்­கி­டையில் இது­வரை நடை­பெற்­றுள்ள கிரிக்கெட் போட்­டி­களில் ரோயல் கல்லூரி அணி 35 போட்டிகளிலும் புனித தோமையார் கல்லூரி அணி 34 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

 

இதனால் இம்­முறை நடை­பெறும் போட்டி மிகவும் விறு­வி­றுப்­பு­மிக்க போட்­டி­யாக அமை­ய­வுள்­ளது. இதில் வெற்றி பெறும் அணி அதிக போட்டிகளில் வெற்றிவாகை சூடிய அணியாக வலம் வரும் என்பது குறிப்பிடத் தக்கது.

இந்நிலையில் 136 ஆவது நீலங்களின் சமரில் இருந்து டயலொக் ஆக்ஷியாட்டா அனுசரணை வழங்கி வருகின்றது. இம்முறையும் டயலொக் ஆக்ஷியாட்டா பிரதான அனுசரணையாளராக இருக்கின்றது.