பாராளுமன்ற விவாதத்தை தொலைபேசியில் பதிவு செய்யவதற்கு அனுமதியில்லையென சபாநாயகர் மஹிந்த யாப்பாஅபேவர்தன தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தொலைபேசியில் பதிவு செய்து அதனை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்வதற்கும் இனி அனுமதியில்லையென சபாநாயகர் மேலும் கூறியுள்ளார்.
பொருளாதார பாதிப்புக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கை என்ன ? என்று எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ 27- 2 கீழ் எழுப்பிய கேள்விக்கு ஆளும் தரப்பினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து களேபரத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்வை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார பேஸ்புக் வாயிலாக வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையிலேயே சபாநாயகர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தகாத வார்த்தைகளை பிரயோகித்து ஆளும் தரப்பினர் சபை நடுவில் வந்து எதிர்க்கட்சித் தலைவரின் உரைக்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். ஆளும் தரப்பினரது செயற்பாடுகளை பிரதமர் தினேஷ் குணவர்தன அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.
ஆளும் மற்றும் எதிர்தரப்பினருக்கு இடையில் இடம்பெற்ற அமளிதுமளியால் கலரியில் அமர்ந்திருந்த பாடசாலை மாணவர்கள் உடனடியாக கலரியில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM