(எம்.எம்.சில்வெஸ்டர்)
இந்தியாவின் அகமதாபாத்தில் இன்றைய தினம் (21) நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் சபை (ஐசிசி) கூட்டத்தில் இலங்கை கிரிக்கெட் சபை மீது விதிக்கப்பட்டுள்ள சர்வதேச போட்டித் தடையை நீக்குவதா அல்லது தொடர்வதா என்பது குறித்து முடிவு செய்யப்படும்.
சர்வதேச கிரிக்கெட் சபையின் பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் இன்று நடைபெறும் கூட்டத்தில், இலங்கை கிரிக்கெட் சபை மீதான தடை தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டு உரிய தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது.
அத்துடன், எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கையில் நடத்தப்படவுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் ஷம்மி சில்வா, இலங்கை கிரிக்கெட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் பார்வையாளர் மட்ட பிரதிநிதியாக மாத்திரமே இது தொடர்பான கலந்துரையாடலில் பங்கேற்க முடியும். இலங்கை கிரிக்கெட்டுக்கு சர்வதேச தடை விதிக்கப்பட்டுள்ளதால், இலங்கை கிரிக்கெட் தலைவர் செயல்வடிவ நிலையில் இக்கூட்டத்தில் பங்கேற்க முடியாது.
கடந்த 10ஆம் திகதி சர்வதேச கிரிக்கெட் சபை, இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தியதுடன், இன்று நடைபெறவுள்ள ஐ.சி.சி. கூட்டத்தில் இது தொடர்பான மேலதிக தீர்மானம் எடுக்கப்படும் என குறிப்பிடப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM