நாட்டின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக பல பிரதேச செயலகப் பிரிவுகளில் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்படக் கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது .
மஹா ஓயா நீர்த்தேக்கத்தின் நீர் மட்டத்தை அவதானித்தபோது அலவ்வ, திவுலப்பிட்டிய, மீரிகம , பன்னல, வென்னப்புவ, நீர்கொழும்பு, கட்டான, நாரம்மல மற்றும் தங்கொட்டுவ ஆகிய தாழ்வான பகுதிகளில் பாரிய வெள்ளம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது.
மத்திய மலைநாட்டில் பெய்து வரும் கடும் மழையினால் பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
ராஜாங்கணை நீர்த்தேக்கத்திற்கு கலா ஓயா ஊடாக வினாடிக்கு 3,600 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கலாவெவ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் உயர்வடைந்ததன் காரணமாக அதன் இரண்டு வான் கதவுகள் தலா 3 அடி வரை திறக்கப்பட்டுள்ளன.
இத்துடன் குறித்த வெள்ள நிலைமையை கருத்திற்கொண்டு மக்கள் அவதானமாக செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM