தளபதி 68 முதற்பார்வை புத்தாண்டில்!

20 Nov, 2023 | 05:10 PM
image

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் ப்ரபு இயக்கத்தில் உருவாகிவரும் விஜய்யின் 68 படத்தின் படப்பிடிப்புகள் சென்னையிலும் தாய்லாந்திலும் நிறைவடைந்துவிட்டன. அடுத்த கட்டமாக, மீண்டும் சென்னையில் அடுத்த வாரம் படப்பிடிப்புகள் ஆரம்பமாகவுள்ளன.

இந்த நிலையில், இந்தப் படத்தின் First Look ஜனவரி 1ஆம் திகதி வெளியிடப்படும் என்று உத்தியோகபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, 2024 ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் படம் வெளியாகலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

விஜய் - வெங்கட் ப்ரபு என்ற வித்தியாசமான கூட்டணியில் உருவாகும் இந்தப் படத்தில், ப்ரபுதேவா, ‘மைக்’ மோகன், ப்ரஷாந்த், ஸ்னேஹா, லைலா, யோகி பாபு, ப்ரேம்ஜி, வைபவ் என்று நட்சத்திரப் பட்டாளமே களமிறங்கியிருக்கிறது.

முதன்முறையாக, விஜய்யின் படத்துக்கு இசையமைக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right