பிரிஸ்பேன் சர்­வ­தேச டென்னிஸ் தொடரின் இரட்­டையர் பிரிவு முதல் சுற்றில் இந்­தி­யாவின் சானியா மிர்சா மற்றும் சுவிட்ஸர்­லாந்தின் மார்­டினா ஹிங்கிஸ் ஜோடி வெற்­றி­பெற்­றது.

அவுஸ்­தி­ரே­லி­யாவின் பிரிஸ்பேன் நகரில் சர்­வ­தேச டென்னிஸ் தொடர் நடை­பெற்­று­வ­ரு­கி­றது. இதன் பெண்கள் இரட்­டையர் பிரிவு முதல் சுற்றில் உலகின் முதல்­தர இணை­யான சானியா மற்றும் ஹிங்கிஸ் ஜோடி, இஸ்­ரேலின் ஷகர் பியர், அமெ­ரிக்­காவின் ரியா சான்செஸ் ஜோடியை சந்­தித்­தது.

மொத்தம் 52 நிமி­டங்கள் நீடித்த இந்தப் போட்­டியில் அபா­ர­மாக ஆடிய சானியா ஜோடி 6-–1, 6–-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்றது.