அவுஸ்திரேலிய அணித்தலைவருக்கு பிரதமர் மோடி கைகொடுக்கவில்லையா ? ; நடந்தது என்ன ?

Published By: Digital Desk 3

20 Nov, 2023 | 04:32 PM
image

சி.சி.என்

13 ஆவது உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித்தொடரில் இறுதிப் போட்டியில்  இந்திய அணியை வெற்றி கொண்டு ஆறாவது தடவையாக  சாம்பியன் கிண்ணத்தை அவுஸ்திரேலியா அணி கைப்பற்றியுள்ளது.

19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இப்போட்டியில்  சுமர் ஒன்றரை இலட்சம் இரசிகர்கள் குழுமியிருந்து  அகமாதாபாத் மோடி  சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில், எந்த தடுமாற்றமும் இல்லாமல் இரண்டாவதாக துடுப்பெடுத்தாடி  இந்திய மண்ணிலேயே இந்திய அணியை தோற்கடித்து கிண்ணத்தை வென்ற  அவுஸ்திரேலிய அணியை உலகம் முழுதும் உள்ள கிரிக்கெட் இரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

இப்போட்டியைப் பார்வையிட  இந்திய  பிரதமர் நரேந்திரமோடியும் வருகை தந்திருந்தமை முக்கிய விடயம்.  சாம்பியன் கிண்ணம் வென்ற அவுஸ்திரேலிய அணியின்  தலைவர் பட் கம்மின்சுக்கு  பிரதமர் மோடி வெற்றிக்கிண்ணத்தை வழங்கினார். எனினும், கிண்ணத்தை வழங்கிய பிறகு அவருடன் கைகுலுக்காமல் ஒரு வார்த்தை தானும் பேசாமல் அவர் திரும்பிச் செல்வதைப்போன்ற வீடியோ பதிவொன்று சமூக ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றது.  

பிரதமர் மோடி பேசுவார் என எதிர்ப்பார்த்து மேடையில் கிண்ணத்துடன் நின்ற அவுஸ்திரேலிய அணித்தலைவர் கம்மின்ஸ் மிகவும் தர்மசங்கடமான நிலைக்குச் சென்றது போலவும், அவர் தட்டுத்தடுமாறி சிரித்த முகத்துடன் பிரதமர் மோடி செல்வதையே பார்த்துக்கொண்டிருந்து விட்டு மீண்டும் சகஜ நிலைமைக்கு திரும்புவது போன்றும் அந்த வீடியோவில் உள்ளது.  

இந்தியா கிண்ணத்தை சுவீகரிக்க முடியாது போன காரணத்தினால்  பிரதமர் மோடி அவ்வாறு நடந்து கொண்டாரா அல்லது வேறு எதுவும் அவசர பணி காரணமாக அவர்  மேடையை விட்டு அகன்றாரா  என்ற கேள்விகளோடு அவரது  செய்கையை  விமர்சித்து பலரும் தமது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் நடந்த விடயமோ வேறு. பிரதமர் மோடி கிண்ணத்தை வெற்றிக் கிண்ணத்தை வழங்கி விட்டு மேடையை விட்டு செல்வதற்கு முன்பு உள்ள காணொளியை அவதானித்தால் உண்மை விளங்கும்.

இறுதிக் கிண்ண விருது வழங்கல் நிகழ்ச்சியை ரவி சாஸ்த்ரி தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தார். பொதுவாக குழுவினர்  போட்டிகளில் விருது வழங்கல் நிகழ்வில் ஒரு சம்பிரதாயம் உள்ளது. சாம்பியன் பட்டம் வென்ற அணியின் சகல வீரர்களுக்கம் பதக்கங்கள் வழங்கப்படும் போது இறுதியாகவே அணித்தலைவருக்கு வழங்கப்படும். அவர் மேடையில் இறுதியாக பதக்கத்தைப் பெற்ற பிறகு அவரது கைகளில்  வெற்றிக்கிண்ணம் வழங்கப்படும். பின்பு அவரோடு ஏனைய வீரர்கள் ஒன்றிணைந்து அணிவகுத்து நிற்பர்.

இது கிரிக்கெட் போட்டிகளிலும் வழமையானதொன்று. சாம்பியனான அவுஸ்திரேலிய அணியினர் அனைவருக்கும் பதக்கங்கள் அணிவிக்கப்படுகின்றன. இறுதியாக அணித்தலைவர் பட் கம்மின்ஸ் பதக்கத்தை அணிந்து கொண்டு ரவி சாஸ்த்ரி இருக்கும் மேடைக்கு வருகின்றார். அவர் சம்பிரதாயப்படி  இறுதிப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்று களத்தடுப்பை தேர்ந்தெடுக்க காரணமென்ன, அணியில் மூன்று விக்கட்டுகள் குறைந்த ஓட்டங்களில் வீழ்ந்ததையடுத்து களத்தில் நிற்கும் இருவருக்கு நீங்கள் அனுப்பிய தகவல் என்ன போன்ற கேள்விகளை கேட்கிறார்.

அதற்கு பொறுமையாக பதிலளிக்கின்றார் கம்மின்ஸ். பின்பு வெற்றிக்கிண்ணத்தை வழங்குவதற்கு பிரதமர் நரேந்திர மோடியை மேடைக்கு அழைக்கின்றார் ரவி சாஸ்த்ரி. மோடியோடு இறுதிப் போட்டி நிகழ்வில் கலந்து கொள்ள வருகை தந்த அவுஸ்திரேலிய நாட்டின் பிரதி பிரதமர்   ரிச்சர்ட் மார்ல்ஸும்    மேடைக்கு வருகின்றார். பட் கம்மின்சை மகிழ்ச்சியோடு கைலாகு கொடுத்து மேடைக்கு முன்பாக அழைத்து வருகின்றார் பிரதமர் மோடி. பின்பு கிண்ணத்தை வழங்கும் போது சவாலில் வென்றவருக்கு வழங்கப்படும் விதத்தில் கைலாகு கொடுத்து வாழ்த்து தெரிவிக்கின்றார்.

பின்பு மேடைக்குக் கீழே நிற்கும் ஏனைய அவுஸ்திரேலிய அணி வீரர்களை வாழ்த்துவதற்காக அவுஸ்திரேலிய பிரதி பிரதமர், மோடியை  அழைத்து செல்கின்றார். அவுஸ்திரேலிய அணி வீரர்கள் அனைவருக்கும் மோடி கைலாகு கொடுத்து வாழ்த்து தெரிவிக்கின்றார். அவர்கள் ஒவ்வொருவராக மேடைக்கு வருகை தந்து பட் கம்மின்சுடன் இணைந்து கிண்ணத்தோடு மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.

இதுவே இடம்பெற்ற நிகழ்வாகும். எனினும், இந்திய அணி தோல்வியுற்றமையை கொண்டாடி வரும் சிலர் பாதி காணொளியை சமூக ஊடகங்களில் பதிவேற்றி இந்தியா வெற்றி பெறாததால் பிரதமர் மோடி அவுஸ்திரேலியா அணித்தலைவரை அவமதித்து விட்டு செல்கிறார் என போலியான பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வதேச எயிட்ஸ் தினம் இன்று :...

2023-12-01 07:24:58
news-image

போதைப்பொருள் கடத்தல் மையமாக மாறுகிறதா இலங்கை?

2023-11-30 17:31:03
news-image

துஷ்பிரயோகத்தால் கர்ப்பமடையும் சிறுமிகளின் எதிர்காலம் ?

2023-12-01 11:25:27
news-image

சமூக மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் திருநர்கள்!

2023-11-29 21:00:21
news-image

மூடு விழா காணும் வைத்தியசாலைகள்! :...

2023-11-29 17:29:24
news-image

கடன்களை பெறுவதற்கு பொருத்தமான காலமா?

2023-11-29 14:15:02
news-image

நிகழ்நிலை பாதுகாப்பா அல்லது சுதந்திரமான நிகழ்நிலைப்...

2023-11-29 16:26:25
news-image

2.3 மில்லியன் குழந்தைகள் உட்பட 5.7...

2023-11-29 12:44:11
news-image

பாதுகாப்பு கரிசனைகளை புறக்கணிக்கும் இலங்கையின் மாணிக்கக்...

2023-11-29 14:51:32
news-image

பெருந்தோட்ட மக்களின் 'முகவரி பிரச்சினைக்கு' நிரந்தர...

2023-11-28 11:59:25
news-image

 ஓய்வு பெற்ற பிறகும் ஓய்வூதியம் பெறாதிருக்கும்...

2023-11-28 11:20:13
news-image

தொழிற்சங்க செயற்பாடுகள் இனியும் சாத்தியப்படுமா? 

2023-11-28 11:41:09