குட்நைட் கூட்டணியில் சி.கா?

20 Nov, 2023 | 04:36 PM
image

பெயரிடப்படாத தனது 21வது படத்தில் நடித்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தை இயக்குகிறார் ராஜ்குமார் பெரியசாமி.

இராணுவக் களத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார் ஜீ.வி.பிரகாஷ் குமார். படத்தில், சிவகார்த்திகேயன் இணையாக நடிக்கிறார் நடிகை சாய் பல்லவி.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் சிவகார்த்திகேயன். இவ்வாண்டு இறுதியில் ஆரம்பமாகவிருக்கும் இந்தப் படத்தில், நாயகியாக மிருணாள் தாகூர் நடிக்கிறார். மேலும் மலையாள சுப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் வித்யுத் ஜம்வால் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.

இந்த நிலையில், சிவகார்த்திகேயனின் 23வது படத்தை, சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ‘குட்நைட்’ படத்தின் இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கவிருப்பதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

குட்நைட் படத்தின் திரைக்கதை தனக்கு மிகப் பிடித்திருந்ததாகக் கூறியிருக்கும் சிவகார்த்திகேயன், தனது அடுத்த படத்துக்காக இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் கூறிய திரைக்கதையும் தன்னைப் பெரிதும் ஈர்த்ததாகவும் கூறியிருக்கிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right