வரவு - செலவுத்திட்டத்தை பொதுஜன பெரமுன ஆதரிக்கக்கூடாது - ஜி.எல். பீரிஸ்

20 Nov, 2023 | 04:36 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

நாட்டில் அடுத்த வருடம்  புதிய வரிக் கொள்கைகள் அமுல்படுத்தப்படவுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்து மக்களின் வாழ்க்கை செலவு அதிகரிக்கும். 

பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்படவில்லை. எனவே பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து உள்ள மக்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் இந்த வரவு செலவுத்திட்டத்தை பொதுஜன பெரமுன ஆதரிக்கக் கூடாது என சுதந்திர மக்கள் சபையின்  பிரதிநிதியும் பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர்  ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்டுள்ள பட்ஜெட் நாட்டுக்கு பொருத்தமானதா? அல்லது தற்போது இருக்கும் நெருக்கடிகளை மேலும் உக்கிரமடைய செய்யும் ஒன்றா என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும். 

அடுத்த வருடம் மேலும் புதிய வரிக் கொள்கைகள் அமுல்படுத்தப்படவுள்ளது. வற் வரி 60 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது. இந்த வற் வரி நாட்டு மக்களிடமிருந்தே அறவிடப்பட இருக்கிறது.

இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்து, மக்களின் வாழ்க்கை செலவு அதிகரிக்கும். உழைக்கும் மக்கள் பாதிக்கப்பட போகிறார்கள்.

இதேவேளை கடந்த 8 மாதங்களுக்குள் மின் கட்டணம் செலுத்தாத சுமார் 7 இலட்சத்து 80 ஆயிரத்து 835 குடும்பங்களின் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதுவே நாட்டின் தற்போதைய நிலைமை.

 எனவே நாட்டு மக்களின் வாழ்க்கை செலவு வானத்தை தொடும் அளவுக்கு உள்ள நிலையில் இந்த வரவு செலவுத்திட்டம் மீண்டும் அவர்களை நெருக்கடிக்குள் தள்ளும் என்பதை உணர்ந்து பாராளுமன்றத்தில் நாம் வரவுசெலவுத்திட்டதுக்கு ஆதரவளிக்க வேண்டுமா என்பதை யோசிக்க வேண்டும்.

பணமில்லை என கூறி நாட்டின் வளங்களை விற்பனை செய்கிறார்கள். நாட்டின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது. அதிக வரியை அறிவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு கடன்களை பெற்றுக்கொள்கிறார்கள். இருக்கும் கடனை செலுத்தாமல் மேலும் மேலும் கடன்களை பெற்றுக்கொள்கிறார்கள். இந்த வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் வெறும் கற்பனை கனவுகள். நடைமுறைக்கு பொருந்தாது.

பாராளுமன்றத்தின் பெரும்பான்மை பொதுஜன பெரமுனவிடமே  இருக்கிறது. வரவு செலவுத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதா அல்லது தோற்கடிக்க செய்வதா என்பது அவர்களின் கைகளிலேயே உள்ளது.நாட்டின் பொருளாதாரம், நாட்டு மக்களின் எதிர்காலம் பெரமுன எடுக்க போகும் தீர்மானத்திலேயே தங்கியுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தொடர்ந்து பயன்படுத்தப்படும் பயங்கரவாத தடைச்சட்டம் -...

2023-12-01 11:04:44
news-image

களுத்துறையில் பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட...

2023-12-01 11:01:23
news-image

ஜனநாயகம் சட்டத்தின் ஆட்சி குறித்து பேசுகின்றோம்...

2023-12-01 10:50:23
news-image

பஸ் கட்டணத்தில் மாற்றமில்லையாம் !

2023-12-01 10:42:45
news-image

வெள்ள அபாய எச்சரிக்கை : தண்ணி...

2023-12-01 10:19:43
news-image

குற்றப்புலனாய்வுப் பிரிவில் இன்றும் ஆஜரானார் போதகர்...

2023-12-01 10:16:56
news-image

மலையகத்திற்கான ரயில் சேவைகள் பாதிப்பு

2023-12-01 09:17:04
news-image

தமிழரசுக்கட்சியின் தலைமைத்துவ போட்டிக்களத்தில் இருவர் குதிப்பு

2023-12-01 07:20:25
news-image

அனைத்து துறைகளிலும் இடம்பெறும் கேள்வி மனுக்கோரல்...

2023-12-01 07:26:31
news-image

தலைமன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் தரை வழிப்பாதையமைக்க முயற்சி...

2023-12-01 07:19:32
news-image

வடக்கிற்கு வெகுவிரைவில் விஜயம் செய்வேன் :...

2023-12-01 07:17:37
news-image

அம்பாறையிலுள்ள வைத்தியசாலைகளின் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய...

2023-12-01 07:15:48