குழந்தை பருவத்தின் மெல்லிசைக்கு முன்பாக ஏவுகணைகளின் சத்தங்களை கற்றுக்கொள்ளும் காசா குழந்தைகள்

Published By: Rajeeban

20 Nov, 2023 | 03:37 PM
image

Maram Humaid

aljazeera

எனது மகளிற்கு மூன்று வயது எனது உறவினரின் குழந்தை பிறந்து ஒரு மாதம்

அவர்களிற்கான செய்தி இது

நீங்கள் ஏதோ தவறான விடயம் இடம்பெறுவதை உணர்கின்றீர்கள் என்பது எனக்கு தெரியும், குண்டுவெடிப்புகளிற்கான உங்களின் எதிர்வினைகள் புரிந்துகொள்ளக்கூடியவை, ஒவ்வொரு சத்தத்தின் போதும் உடலை அசைத்தல், அழுகை.

இரவு முழுவதும்  உங்கள் தலைமேல்  காணப்படும் விமானங்கள் விழுந்து வெடிக்கும் குண்டுகளால் கலக்கமடைந்த நீங்கள்  சிலநேரங்களில்; எங்களின் முகங்களில்  விடைகளை தேடுகின்றீர்கள் 

எனது அன்புக்குரிய குழந்தைகளே 

நீங்கள் வாசிப்பதற்கு பாதுகாப்பான  உலகில்வாழ்வீர்கள் என்ற நம்பிக்கையில் நான் இதனை எழுதுகின்றேன்

ஆனால் கவலையளிக்கும் விதத்தில் இது உறுதியான விடயமா என்பதை என்னால் சொல்ல முடியவில்லை.

தொடரும் நிலைமைகள் உங்களின் தலைமுறைக்காக இந்த வாக்குமூலத்தை பதிவு செய்ய நிர்ப்பந்திக்கின்றன.

நாங்கள் உங்கள் விழிகளுக்குள் உற்றுநோக்கும்போது அல்ஸிபா மருத்துவமனையிலிருந்து இடமாற்றப்படும் குறிப்பிட்ட மாதத்திற்கு முன்னரே பிறந்த குழந்தைகளை கற்பனை செய்துபார்க்கின்றேன் ,இந்த இடமாற்றம் அவர்களின் உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றது.

உலகம் அனேகமான அப்பாவிகளுக்கு ஒரு மயானமாகமாறியுள்ளது - தரைவழி தாக்குதல் காரணமாக தாங்கள் அடையமுடியாமல் போன பிள்ளைகளிற்காக காத்திருக்கும் அல்லது இடம்பெயர்ந்துள்ள - கொல்லப்பட்டுள்ள பெற்றோரை நான் நினைத்துப்பார்க்கின்றேன்.

என் குழந்தைகளே எனது இதயம் அதிகமாக அழுகின்றது - ஒவ்வொரு நாளும் மருத்துவமனையில் இந்த குழப்பங்களிற்கு இடையில் பிறக்கும் குழந்தைகளிற்காக நான் கண்ணீர்விடுகின்றேன்,அவர்கள் தற்காலிக கூடாரங்களில் சிரிக்கும்போது நான் கதறிஅழுகின்றேன்,

அவர்கள் தங்களை சுற்றி துயரமான பேரழிவை உணரமுடியாதவர்களாக உள்ளனர் -அவர்களால் இதனை எதிர்காலத்தில் மாத்திரம் புரிந்துகொள்ள முடியும்.

இந்த துயரமான சூழ்நிலைகளில் உங்களின் நலன் என்பது எங்களிற்கு உங்கள் பெற்றோருக்கு மிகுந்த கரிசனைக்குரிய விடயமாக காணப்படுகின்றது.

கடந்த வாரம் உங்களின் இடைவிடாத அழுகையை அதற்கான காரணத்தை புரிந்துகொள்ள முடியாமல் நாங்கள் தவித்தோம்,

உங்கள் பேத்தியரின் சிறுநீரக வலியை அடிப்படையாக வைத்து பின்னர் அசுத்தமான குடிநீரே இதற்கான காரணம் என்பதை  நாங்கள் அறிந்தோம்.

சுத்தமான குடிநீரின் அவசியத்தை நாங்கள் உணர்ந்திருந்தாலும் - எங்களிடம் மாற்றுவழிகள் எதுவுமில்லை. உங்களின் பாதுகாப்பிற்காக சுத்தமான மினரல் நீரிற்கான தேடல்களை நாங்கள் தொடர்கின்றோம்.

நாங்கள் நாளாந்தம் மருத்துவமனைக்கும் எனது பத்திரிகை அலுவலகத்திற்கும் சென்று குடிநீர் உள்ளதா என பார்க்கின்றோம்.

வீட்டிற்கு  சுத்தமானகுடிநீருடன் திரும்பிவருவது பொக்கிசத்தை கண்டெடுத்த உணர்வை ஏற்படுத்துகின்றது - இது அடிப்படை தேவைகள் குறித்து காணப்படும் பெருங்குழப்பநிலையை நினைவுபடுத்துகின்றது.

இனப்படுகொலையின் பல்வேறு வழிகளில் நமது போராட்டத்தை பார்க்கும் இந்த  அற்புதமான உலகை நான் உங்களிற்கு அறிமுகப்படுத்த விரும்புகின்றேன்.

குடிநீர் உணவு தட்டுப்பாடுகளிற்கு அப்பால் மின்சாரம் இணையம் பல்பொருள் அங்காடி விநியோகம் எரிபொருள் பாண் போன்றவை இல்லாமல் போய் ஒருமாதமாகிவிட்டது.

தொடரும் விமானக்குண்டுவீச்சுகள் முடிவற்ற யுத்தகளறியை ஏற்படுத்துகின்றன,அவை வாழ்க்கையின் அனைத்து விடயங்களையும் இலக்குவைக்கின்றன- இந்த உலகை உங்களை போன்ற குழந்தைகளிற்கு பாதுகாப்பற்றதாக்குகின்றன.

மருத்துவமனையில் ஒவ்வொருநாளும் இரத்தம்தோய்ந்த துணிகளில் போர்த்தப்பட்டிருக்கும் பெண்கள் ஆண்கள் முதியவர்களின் உடல்களை நான் பார்க்கின்றேன் ,ஆனால் மனதை அதிகம் வருத்துபவை குழந்தைகளின் உடல்களே

குழந்தைகள் இங்கு தாலாட்டை கேட்க முதல் ஏவுகணைகளின் சத்தங்களையே கேட்கின்றன.

இடம்பெயர்ந்தவர்கள் ,துண்டிக்கப்பட்டவர்கள் துக்கத்தில் சிக்குண்டவர்கள் மற்றும் முற்றுகையிடப்பட்டவர்கள் இப்படித்தான் காசா மக்கள் தொடர்ந்தும்  இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை எதிர்கொள்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சமூக மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் திருநர்கள்!

2023-11-29 21:00:21
news-image

மூடு விழா காணும் வைத்தியசாலைகள்! :...

2023-11-29 17:29:24
news-image

கடன்களை பெறுவதற்கு பொருத்தமான காலமா?

2023-11-29 14:15:02
news-image

நிகழ்நிலை பாதுகாப்பா அல்லது சுதந்திரமான நிகழ்நிலைப்...

2023-11-29 16:26:25
news-image

2.3 மில்லியன் குழந்தைகள் உட்பட 5.7...

2023-11-29 12:44:11
news-image

பாதுகாப்பு கரிசனைகளை புறக்கணிக்கும் இலங்கையின் மாணிக்கக்...

2023-11-29 14:51:32
news-image

பெருந்தோட்ட மக்களின் 'முகவரி பிரச்சினைக்கு' நிரந்தர...

2023-11-28 11:59:25
news-image

 ஓய்வு பெற்ற பிறகும் ஓய்வூதியம் பெறாதிருக்கும்...

2023-11-28 11:20:13
news-image

தொழிற்சங்க செயற்பாடுகள் இனியும் சாத்தியப்படுமா? 

2023-11-28 11:41:09
news-image

பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்ப மக்களுடனான நம்பிக்கையை மீளக்கட்டியழுப்பவேண்டும்

2023-11-28 11:36:20
news-image

அரச வருமான இலக்கை அடைவதன் சவால்கள்

2023-11-27 17:53:39
news-image

2036 ஒலிம்பிக்ஸ் விளையாட்டுக்களை நடத்தும் வல்லமை...

2023-11-27 17:49:39