கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் மேம்பாட்டுக்கான பல்வேறு திட்டங்கள் துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் அமைச்சர்கள் பலரின் பங்களிப்புடன் இன்று (20) காலை கட்டுநாயக்கவில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இந்த திட்டங்களுக்காக இலங்கை முதலீட்டுச் சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் உட்பட பல நிறுவனங்கள் நிதி உதவிகளை வழங்கியுள்ளன.
கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு முன்பாக வீதி அமைத்தல் , கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்துக்கான புதிய வீதி, புறப்படும் பயணிகளுக்கான புதிய வாகன தரிப்பிட வசதிகள், விமான போக்குவரத்து வசதிகள் என்பன இந்த மேம்மபாட்டுத் திட்டத்தில் இடம்பெறுகின்றன.
மேலும் விமான நிலைய செயற்பாடுகளுக்கான இலகு முறைகள் , விமான நிலைய மின்சார வசதிகளுக்கான திட்டங்கள், விமான நிலையத்துக்குள் நுழையும் பயணிகளுக்கான ஒன்லைன் செயன்முறைகள், பத்திரிகைகள் படிப்பதற்கான வசதிகள் , விமான நிலைய வருகை முனையத்தில் "Welcome To Sri Lanka" பெயர் பலகை பொருத்தல் ஆகியவையும் மேற்கொள்ளப்பட்டன.
இந்த திட்டங்களினால் தெற்காசியாவின் வினைத்திறன்மிக்க விமான நிலையமாக கட்டுநாயக்க விமான நிலையம் காணப்படும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, அமைச்சர் பந்துல குணவர்தன, அமைச்சர் நளின் பெர்னாண்டோ, அமைச்சர் பிரேமலால் ஜயசேகர, அமைச்சர் லசந்த அழகியவண்ண உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM