தனியார் ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்திருந்த நடிகர் மன்சூர் அலிகான், நடிகை த்ரிஷா பற்றித் தெரிவித்த கருத்துக்களுக்கு, திரைப் பிரபலங்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
குறித்த பேட்டியில், நடிகர் மன்சூர் அலிகான், லியோவில் த்ரிஷாவுடன் நெருக்கமாக நடிக்கும் காட்சிகளோ, வல்லுறவுக் காட்சிகளோ இருக்கும் என்று தான் எதிர்பார்த்ததாகவும் அவ்வாறான காட்சிகள் இல்லாததால் தான் ஏமாற்றமடைந்ததாகவும் கூறியிருந்தார்.
அத்துடன், தகாத வார்த்தைகள் சிலவற்றைப் பயன்படுத்தி, அந்தக் காலத்தில் தான் குறிப்பிட்ட கதாநாயகிகளை (திரையில்) வல்லுறவுக்குட்படுத்தியதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்தக் காணொளி காட்டுத் தீயாகப் பரவியதுடன், மன்சூர் மீதான கண்டக் குரல்களும் சடுதியாக எழத் தொடங்கின.
இதுபற்றி தனது எக்ஸ் பக்கத்தில் கருத்துத் தெரிவித்திருக்கும் த்ரிஷா, மன்சூர் அலிகான் தன் மீது எழுப்பியிருக்கும் இந்த தரக்குறைவான கருத்துக்களை வன்மையாகக் கண்டிப்பதாகவும் இது வெறும் ஆபாசக் கருத்தாக மட்டுமன்றி, தன்னை அவமானப் படுத்துவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இது பற்றி இயக்குனர் லோகேஷ் கனகராஜ், பாடகி சின்மயி உட்பட, பல்வேறு பிரபலங்களும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM