ஸ்ரீரங்காவுக்கு பிணை வழங்குவதில் ஏற்பட்டுள்ள இழுத்தடிப்பு குறித்து கவனம் செலுத்த வேண்டும் : தயாசிறி, கஜேந்திரகுமார் சபாநாயகரிடம் கோரிக்கை

Published By: Vishnu

20 Nov, 2023 | 02:11 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

வாகன விபத்தொன்று காரணமாக சிறைப்படுத்தப்பட்டிருக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெ. ஸ்ரீரங்காவுக்கு சாட்சியாளர்களை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் பிணை பெற்றுக்கொள்ளும் விடயம்  இழுத்தடிக்கப்பட்டு வருவதால் அவர் தொடர்ந்தும் சிறையில்  இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் இந்த விடயம் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (20) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

சாட்சியாளர்களை பாதுகாக்கும் சட்டம் இந்த சபையில் அனுமதிக்கப்பட்டு, சபாநாயகராகிய நீங்கள் அதில் கைச்சாத்திட்டிருந்திருந்தீர்கள்.

குறித்த சட்டத்தின் பிரகாரம்  இதுவரை காலமும் ஒருவருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் ஊடாக பிணை பெற்றுக்கொள்ள முடியுமாகி இருந்த  நடவடிக்கையை நீதிவான் நீதிமன்றம் ஊடாக பிணை பெற்றுக்கொள்ள முடியுமாகிறது.

அதன் பிரகாரம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்கா பிணை பெற்றுக்கொள்வதற்காக நீதிவான் நீதிமன்ற்ததுக்கு பல தடவைகள் சென்றுள்ளார்.

ஆனால்  இந்த பிணையை மேன்முறையீட்டு நீதிமன்றலேயே பெற்றுக்கொ்ளள முடியும் என அவருக்கு அங்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு சென்றால்  நீதிவான் நீதிமன்றத்துக்கு செல்லுமாறு தெரிவிக்கப்படுகிறது.  இந்த சட்டத்துக்கு நீங்கள் கைச்சாத்திட்ட பின்னர் நீதி அமைச்சர் அதில் கைச்சாத்திடவில்லை என தெரிவித்து, அவர் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்.

அதேநேரம் சாட்சியாளர்களை பாதுகாக்கும் சட்டத்துக்கு கீழ் கைதுசெய்யப்பட்டிருந்த  அனைவரும் தற்போது விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர். 

ஆனால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்காவுக்கு பிணை வழங்கும் செயற்பாடு அங்குமிங்கும் தள்ளப்பட்டு வருவதால் கடந்த 8 மாதங்களாக அவர் சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார். இது அவரின் மனித உரிமை மீறலாகும். அதனால் இது தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

அதனைத் தொடர்ந்து எழுந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிடுகையில், ஸ்ரீரங்கா வாகன விபத்தொன்றுக்காகவே சிறைப்படுத்தப்பட்டிருக்கிறார்.

அவருக்கு பிணை வழங்கும் செயற்பாட்டில் இழுத்தடிப்பு ஏற்பட்டு வருகிறது. ஆனால் சட்டமா அதிபர் திணைக்களம் விசேட  சட்டத்தரணி ஒருவரை அவரின் விடயத்தில் நியமித்திருக்கிறது.

இது ஒருபோது  இடம்பெறாத ஒன்று. ஸ்ரீரங்கா உயர் குருதி அழுத்துக்கு ஆளாகி இருக்கிறார். அதேபோன்று அவரது தாய் வெளிநாட்டில் இருந்து அவரை பார்ப்பதற்காக வந்திருக்கிறார். அதனால் அவரது விடயம் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிலாபம் - குருணாகல் வீதியில் லொறி...

2024-09-19 18:50:35
news-image

தகாத உறவில் ஈடுபட்ட மனைவியின் கையை...

2024-09-19 18:46:15
news-image

அம்பாறை மாவட்டத்தில் இதுவரை 11 தேர்தல்...

2024-09-19 17:30:24
news-image

சட்டத்துக்கு மதிப்பளித்து, கடமையை நிறைவேற்றுவதன் மூலம்...

2024-09-19 17:57:10
news-image

தேசிய பாதுகாப்பு சபை ஜனாதிபதி தலைமையில்...

2024-09-19 17:44:01
news-image

கற்பிட்டியில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட கிருமிநாசினி மருந்துடன்...

2024-09-19 17:14:13
news-image

கொஹுவலை துப்பாக்கிச் சூடு ; இருவர்...

2024-09-19 17:00:22
news-image

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான அமைப்பாளர்...

2024-09-19 16:19:22
news-image

ஒரு வருடத்தின் பின்னர் நெடுந்தாரகை பயணிகள்...

2024-09-19 18:50:32
news-image

கொழும்பில் இரு வெவ்வேறு பகுதிகளில் ஹெரோயின்...

2024-09-19 16:20:52
news-image

நுவரெலியா மாவட்டத்தில் சுதந்திரமானதும் அமைதியானதுமான தேர்தலுக்கான...

2024-09-19 16:21:24
news-image

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் கடமைகளுக்காக 6,750...

2024-09-19 16:35:41