ஹமாஸைத் தோற்­க­டித்தல் : இஸ்­ரே­லியப் படை­களின் சிம்­ம­சொப்­பனம்

20 Nov, 2023 | 02:02 PM
image

சதீஷ் கிருஷ்ணபிள்ளை

கடந்த சனிக்­கி­ழமை  டெல்-­அவிவ் நகரில் கூட்டு செய்­தி­யாளர் மாநாடு நடந்­தது. இஸ்­ரே­லிய பிர­தமர் பெஞ்­சமின் நெத்­தன்­யா­ஹு­வுடன் பாது­காப்பு அமைச்சர் காலண்ட்டும்  பங்­கேற்றார். ஹமாஸ் இயக்­கத்தை ஒழித்துக் கட்­டியே தீருவோம் என்­றார்கள்.

உலக நாடுகள் போர் நிறுத்தம் கோரலாம். தேவை­யேற்­பட்டால், அந்த நாடு­க­ளையே எதிர்த்து நிற்கப் போவ­தாக இஸ்­ரே­லியப் பிர­தமர் சூளு­ரைத்தார்.

அவர்­க­ளது திட­சங்­கற்பம் அடுத்து வரும் நாட்­களில் வெளிப்­பட்­டது. சுற்­றி­வ­ளைக்­கப்­பட்டு முடக்­கப்­பட்­டி­ருக்கும் பலஸ்­தீ­னர்கள் கதறக் கதற, காஸாவில் அவர்கள் மீது தாக்­குதல் நடத்­தி­னார்கள்.

காஸாவின் வடக்கில் இருந்து பலஸ்­தீ­னர்­களை தெற்குப் பக்கம் விரட்­டி­னார்கள். தெற்­கிலும் தாக்­குதல் நடத்­தி­னார்கள். ஆஸ்­பத்­தி­ரி­களை முற்­று­கை­யிட்­டார்கள். முக்­கி­ய­மான ஆஸ்­பத்­தி­ரிக்குள் சர­மா­றி­யாக குண்­டு­மழை பொழிந்­தார்கள்.

காஸா நிலப்­ப­ரப்பை முற்­று­மு­ழு­தாக தமது வச­மாக்கும் முயற்­சியின் இரா­ணுவ நகர்­வுகள். ஹமாஸ் இயக்­கத்தின் முக்­கி­ய­மான தளங்­களை நிர்­மூ­ல­மாக்கி பல­வீ­னப்­ப­டுத்தும் முனைப்பு இஸ்­ரே­லியப் படை­க­ளிடம் தீவி­ர­மாக இருந்­தது.

குறு­கிய நிலப்­ப­ரப்­பிற்குள் இயங்கி, இஸ்­ரே­லியப் படை­களை கதி­க­லங்க வைக்கும் ஆயுத இயக்கம். வல்­ல­ர­சு­களின் அர­சியல் ஆத­ர­வையும், ஆயு­தங்­க­ளையும் பெற்று அணு­வா­யு­தங்­க­ளுடன் திகழும் வலு­வான தேசிய இரா­ணுவம்.

இஸ்­ரே­லியப் படை­களால் ஹமாஸ் இயக்­கத்தை முற்­று­மு­ழு­தாக நிர்­மூ­ல­மாக்கி விட முடி­யுமா? இந்­த­ளவு இரா­ணுவ வல்­லமை மிக்­க­தாக இருந்தால், இஸ்­ரே­லியப் படை­களால் ஏன் ஹமாஸை இன்­னமும் தோற்­க­டிக்க முடி­யாமல் போனது?

காஸாவை சுற்றி எழுப்­பப்­பட்ட கொங்­கிறீட் வேலிகள். அதில் பொருத்­தப்­பட்ட அதி­ந­வீன உள­வு­பார்த்தல் மற்றும் கண்­கா­ணிப்புக் கரு­விகள். இவற்­றை­யெல்லாம் தாண்டி, ஒக்­டோபர் ஏழாம் திகதி ஹமாஸ் இயக்கம் நடத்­திய தாக்­குதல் முக்­கி­ய­மா­னது.

இஸ்­ரே­லிய படை­களின் இயந்­திரக் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு, தமது விடு­தலை நாட்­டத்தின் ஆயுத வடி­வத்தை இஸ்­ரே­லிய மண்ணில் அரங்­கேற்றி விட்டுத் திரும்­பி­னார்கள், ஹமாஸ் ஆயு­த­பா­ணிகள்.

அந்தத் தாக்­கு­தலின் நீட்­சி­யாக, 365 கிலோ­மீற்றர் சதுர நிலப்­ப­ரப்பில் இருந்து கொண்டு, இஸ்­ரேலின் முக்­கி­ய­மான நிலை­களை தாக்­கி­ய­ழிக்கும் ஹமாஸின் ஆயு­த­பலம் கொஞ்ச நஞ்­ச­மல்ல. அது உல­கத்­தையே அதிர்ச்­சி­யிலும், வியப்­பிலும் ஆழ்த்­தி­யது.

இது எப்­படி சாத்­தியம்? ஹமாஸ் இயக்­கத்தின் வலு­வான ஸ்தாபன கட்­ட­மைப்பா? இரா­ணுவ ரீதி­யான ஆற்­றல்­களா? அதன் சுரங்கக் கட்­ட­மைப்பின் மூலம் கிடைக்கும் அனு­கூ­லங்­களா? இவை­யெல்­லா­வற்­றையும் விட, கோட்­பாட்டு ரீதி­யாக கட்­ட­மைக்­கப்­பட்ட விடு­தலை நாட்­டமா?

ஹமாஸ். விரி­வாகச் சொன்னால், ஹர்க்­கத்துல் முக்­கா­வம்மா அல்-­இஸ்­லா­மியா (Harakat al-Muqawama al-Islamiya). ஒரு நற்­பணி இயக்­க­மாக ஆரம்­பிக்­கப்­பட்டு, பலஸ்­தீன விடு­தலை இயக்­கத்­திற்கு போட்­டி­யாக இஸ்­ரே­லிய அர­சாங்­கத்தால் போஷித்து வளர்க்­கப்­பட்ட அமைப்பு.

இன்று இஸ்­ரே­லிய தேசத்தை இல்­லா­தொ­ழித்து, முன்னர் பலஸ்­தீ­ன­மாக இருந்த மண்ணில் அரே­பிய இராஜ்­ஜி­யத்தை ஸ்தாபிப்­ப­தற்­காக அர­சியல் மற்றும் ஆயுதப் போராட்டம் நடத்தும் இயக்­க­மாக பரி­ண­மித்­துள்­ளது. இஸ்­ரே­லுக்கு சிம்ம சொப்­ப­ன­மாகத் திகழ்­கி­றது.

ஆரம்­பத்தில், அர­சியல், இரா­ணுவம், கோட்­பாடு என்ற பிரி­வு­களைக் கொண்­ட­தொரு இயக்­க­மாக ஹமாஸ் திக­ழ­வில்லை. 1990களில் தான் வலு­வான இரா­ணுவப் பிரிவு முக்­கி­ய­மா­ன­தொரு அமைப்­பாக பரி­ண­மித்­தது. இது இன்று இஸ்­ஸதீன் அல்-­கசாம் படை­ய­ணி­யென குறிப்­பி­டப்­ப­டு­கி­றது.

ஹமாஸ் இயக்­கத்தின் இரா­ணுவப் பிரிவு பற்­றிய தக­வல்கள் மிகவும் இர­க­சி­ய­மாக பேணப்­ப­டு­கின்­றன. இருந்­த­போ­திலும், சில வெளி­நாட்டு இரா­ணுவ புல­னாய்வு அமைப்­புகள், இஸ்­ஸதீன் அல்-­கசாம் படை­யணி பற்றி தாம் அறிந்த விட­யங்­களை அம்­ப­லப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றன.

ஹமாஸின் தாக்­குதல் படை­யணி 15,000 முதல் 20,000 அங்­கத்­த­வர்­களைக் கொண்­டி­ருக்­கக்­கூடும் என மூலோ­பாய கற்­கை­ளுக்­கான சர்­வ­தேச நிறு­வனம் மதிப்­பிட்­டுள்­ளது. இந்த எண்­ணிக்கை அதி­க­மாக இருக்­க­லா­மென கூறும் ஆய்­வு­களும் உண்டு.

இஸ்­ஸதீன் அல்-­கசாம் படை­ய­ணியில் உள்ள தாக்­குதல் பிரி­வு­களில் பெரும்­பாலும் காலாட்­ப­டை­களே உள்­ள­தாக தெரிய வந்­தி­ருக்­கி­றது. இது ஒக்­டோபர் ஏழாம் திகதி நடத்­தப்­பட்ட தாக்­கு­தல்­க­ளிலும் புல­னா­னது.

தாங்­கி­களை நிர்­மூ­ல­மாக்கும் ஏவு­க­ணை­க­ளையும் ஹமாஸ்  பயன்­ப­டுத்­தி­யுள்­ளது. இந்த ஏவு­க­ணைகள் பெரும்­பாலும் ஈரான் போன்ற நாடு­களில் தயா­ரிக்­கப்­பட்­டவை. இவை எவ்­வாறு காஸா­விற்குள் கொண்டு வரப்­பட்­டன என்­பது மேலைத்­தேய நாடு­க­ளுக்கும் புரி­ய­தாத புல­னாய்வுப் புதிர்.

காஸாவின் மீது இஸ்ரேல் விதித்த தடைகள் கார­ண­மாக, ஹமாஸ் ஆயுதப் பிரி­விடம் கவச வாக­னங்கள் கிடை­யாது. இதன் கார­ண­மாக, சாதா­ரண வாக­னங்­களைப் பயன்­ப­டுத்­தியே ஹமாஸ் இயக்கம் படை­க­ளையும், ஆயு­தங்­க­ளையும் கொண்டு சென்­ற­தாகத் தெரி­கி­றது.

இஸ்­ரே­லிய மண்ணின் மீது சமீ­பத்தில் நடத்­தப்­பட்ட தாக்­கு­தல்­களை அவ­தா­னிக்­கையில், ஹமாஸ் இயக்கம் வான்­வ­ழி­யாக தாக்­குதல் நடத்­தக்­கூ­டிய படைப்­பி­ரி­வு­களை பயன்­ப­டுத்­தி­யி­ருப்­பதைக் காணக்­கூ­டி­ய­தாக இருக்­கி­றது.

புல­னாய்வு அமைப்­புக்­களை ஆச்­சர்­யப்­ப­டுத்­திய இன்­னொரு விடயம், ஹமாஸ் ஆயு­த­பா­ணிகள் பயன்­ப­டுத்­திய பரா-­கி­ளைடர்ஸ் (Paragliders). காற்றில் சறுக்கிச் செல்­லக்­கூடிய பறக்கும் கரு­விகள். இது தவிர, இருவர் பய­ணிக்­கக்­கூ­டிய மிகச்­சி­றிய வணிக விமா­னங்­க­ளையும் ஹமாஸ் இயக்கம் பயன்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. இவை குறைந்த வேகத்தில் தாழப் பறப்­பதால், இவை இஸ்­ரே­லியப் படை­களின் ராடர் திரைக்குள் சிக்­காமல் போன சந்­தர்ப்­பங்கள் ஏராளம்.

சந்­தையில் கிடைக்கும் பொருட்­களை வைத்து உரு­வாக்­கப்­பட்ட ஆளில்லா சிறு விமா­னங்கள் போன்­ற­வற்­றையும் ஹமாஸ் இயக்கம் வெற்­றி­க­ர­மாக பயன்­ப­டுத்­தி­யி­ருப்­பதைக் காணலாம். இவற்றின் மூலம், இஸ்­ரே­லியப் பீரங்­கிகள் மாத்­தி­ர­மன்றி, படை­வீ­ரர்­களும் இலக்கு வைக்­கப்­பட்­டுள்­ளார்கள்.

இத்­த­கைய ஆயு­தங்கள் எங்­கே­யி­ருந்து ஹமாஸ் இயக்­கத்­திற்கு கிடைக்­கின்­றன என்ற கேள்வி பூதா­க­ர­மாக வெளிக்­கி­ளம்­பு­கையில், மேலைத்­தேய புல­னாய்வு அமைப்­புக்கள் ஈரான் மீது விரலை நீட்­டு­வது வழக்கம்.

இருந்­த­போ­திலும், இஸ்­ரே­லிய, அமெ­ரிக்க அர­சு­களால் இந்தக் குற்­றச்­சாட்டை எப்­போதும் வெளிப்­ப­டை­யாக நிரூ­பிக்க முடிந்­தது கிடை­யாது.

எவ்­வாறு ஆயு­தங்கள் கடத்­தப்­ப­டு­கின்­றன என்ற கேள்வி எழும்­பட்­ச­தத்தில், காஸாவில் இருக்கும் சுரங்க வலைப்­பின்னல் பற்றி பேசப்­படும்.

காஸாவில் நிலப்­ப­ரப்­பிற்குக் கீழே பல மைல்கள் நீளம் வரை நீடிக்கும் சுரங்க வலைப்­பின்னல், 1980களில் முத­லா­வது பலஸ்­தீன எழுச்­சி­யின்­போது உரு­வாக்­கப்­பட்­ட­தாக நம்­பப்­ப­டு­கி­றது.

இஸ்­ரேலின் பொரு­ளா­தாரத் தடை­க­ளுக்கு மத்­தியில், வெளியில் இருந்து அத்­தி­யா­வ­சியப் பொருட்­க­ளையும், ஆயு­தங்­க­ளையும் எடுத்துக் கொண்டு வரக்­கூ­டிய பிர­தான மார்க்­கங்­க­ளாக திகழ்­வது யாவரும் அறிந்த விஷயம்.

இந்த வலைப்­பின்னல் ஆயு­த­மோ­தல்­க­ளின்­போது மூலோ­பாய ரீதியில் முக்­கி­ய­மான வகி­பா­கத்தை எடுத்துக் கொள்­கி­றது. இர­க­சிய இரா­ணுவ செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­கவும், எதிர்­பா­ராத தாக்­கு­தல்­களை நடத்­தவும், யாருக்கும் தெரி­யாமல் வேறு பிராந்­தி­யங்­க­ளுக்கு தப்­பித்துச் செல்­லவும் இந்த வலைப்­பின்னல் உத­வி­யாக இருக்­கி­றது.

இந்தக் சுரங்க வலைப்­பின்­னலில் தான் ஹமாஸ் இயக்­கத்தின் கட்­ட­ளை­யிடும் நிலை­யங்­களும், துருப்­புக்கள் தங்­கி­யி­ருக்­கக்­கூ­டிய முகாம்­களும், ஆயு­தங்­களை சேமித்து வைக்­கக்­கூ­டிய களஞ்­சி­ய­சா­லை­களும் உள்­ள­தாக இஸ்­ரே­லிய தரப்பு நம்­பு­கி­றது.

காஸாவின் வட­ப­கு­தியில் ஹமாஸ் இயக்­கத்தின் பரந்­து­பட்ட சுரங்க வலைப்­பின்னல் இருப்­ப­தாக நம்­பப்­ப­டு­கி­றது. இந்த வலைப்­பின்­னலை தமது வச­மாக்க இஸ்­ரே­லியப் படைகள் பகீ­ரதப் பிர­யத்­த­னங்­களில் ஈடு­பட்டு வரு­கின்­றன.

சமீ­பத்தில் அல்-­ஷிபா வைத்­தி­ய­சா­லையை முற்­று­கை­யிட்ட இஸ்­ரே­லியப் படைகள், அதற்குக் கீழே­யுள்ள சுரங்க வலைப்­பின்­னலைப் பற்­றிய தக­வல்­களை வெளி­யிட்­டி­ருந்­தன.

காஸாவின் வட­ப­கு­தியை முற்று முழு­தாக தமது கட்­டுப்­பாட்­டுக்குள் இஸ்­ரே­லியப் படைகள் கொண்டு வந்­தாலும் கூட, சுரங்க வலைப்­பின்­ன­லுக்குள் நுழைதல் என்­பது மிகவும் அபா­ய­க­ர­மான விட­யமே. நுழைந்தால் எதுவும் நடக்­கலாம்.

சுரங்க வலைப்­பின்னல் என்­பது காஸாவின் பொரு­ளா­தா­ரத்தை தீர்­மா­னித்த கட்­ட­மைப்பு என்­பதால், அதனை ஒரே­டி­யாகத் தகர்த்து விடு­வதும் சாத்­தி­ய­மற்­றது.

இந்த விட­யத்தில் இஸ்­ரே­லியப் படைகள் நிச்­ச­ய­மற்ற, சங்­க­ட­மான நிலையை எதிர்கொள்கின்றன என்பதை சொல்லியே ஆக வேண்டும்.

படைவலுச் சமநிலையில் ஹமாஸ் இயக்கத்தை விடவும் இஸ்ரேலுக்கு கூடுதலான அனுகூலங்கள் இருந்தாலும், ஆண்டாண்டு கால ஒடுக்குமுறைக்கு உள்ளாகிய காஸா பலஸ்தீனர்களின் மனோதிடத்தை வெல்ல முடியாது.

கடந்த 17 வருடங்களாக வேலிபோட்டு அடைத்து வைத்து தம்மை இல்லாதொழிக்க இஸ்ரேல் முனைந்தபோது, தம்மை வாழ வைத்தது ஹமாஸ் இயக்கம் தானென்ற உணர்வு காஸா மக்களுக்கு உண்டு.

 இந்த உணர்வு கூட்டாக பீறிட்டெழும் சந்தர்ப்பத்தில், எந்தவொரு படைப்பலத்தையும் முறியடிக்கும் ஆற்றல் காஸாவில் உள்ள பலஸ்தீனர்கள் மத்தியில் உருவாகும்.

இதை இஸ்ரேலிய் படைகள் மாத்திரமன்றி உலக நாடுகளும் அறிந்தே வைத்திருக்கின்றன என்பதால் தான், இதுவரை காலமும் இஸ்ரேலால் பலஸ்தீனர்களை முற்றுமுழுதாக தோற்கடிக்க முடியாதுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சமூக மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் திருநர்கள்!

2023-11-29 21:00:21
news-image

மூடு விழா காணும் வைத்தியசாலைகள்! :...

2023-11-29 17:29:24
news-image

கடன்களை பெறுவதற்கு பொருத்தமான காலமா?

2023-11-29 14:15:02
news-image

நிகழ்நிலை பாதுகாப்பா அல்லது சுதந்திரமான நிகழ்நிலைப்...

2023-11-29 16:26:25
news-image

2.3 மில்லியன் குழந்தைகள் உட்பட 5.7...

2023-11-29 12:44:11
news-image

பாதுகாப்பு கரிசனைகளை புறக்கணிக்கும் இலங்கையின் மாணிக்கக்...

2023-11-29 14:51:32
news-image

பெருந்தோட்ட மக்களின் 'முகவரி பிரச்சினைக்கு' நிரந்தர...

2023-11-28 11:59:25
news-image

 ஓய்வு பெற்ற பிறகும் ஓய்வூதியம் பெறாதிருக்கும்...

2023-11-28 11:20:13
news-image

தொழிற்சங்க செயற்பாடுகள் இனியும் சாத்தியப்படுமா? 

2023-11-28 11:41:09
news-image

பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்ப மக்களுடனான நம்பிக்கையை மீளக்கட்டியழுப்பவேண்டும்

2023-11-28 11:36:20
news-image

அரச வருமான இலக்கை அடைவதன் சவால்கள்

2023-11-27 17:53:39
news-image

2036 ஒலிம்பிக்ஸ் விளையாட்டுக்களை நடத்தும் வல்லமை...

2023-11-27 17:49:39