ஜப்பான் கடற்பரப்பில் அவுஸ்திரேலிய கப்பலின் மாலுமிகள் மீது சீனா சோனார் தாக்குதல்
சோனார் கதிர்களை பயன்படுத்தி அவுஸ்திரேலிய கடற்படை வீரர்களுக்கு சீனா சிறிய காயங்களை ஏற்படுத்தியது என அவுஸ்திரேலியா குற்றம்சாட்டியுள்ளது.
தங்கள் கப்பலில் சிக்குண்ட மீன்பிடிவலைகளை அகற்ற முயன்றுக்கொண்டிருந்த அவுஸ்திரேலிய கடற்படை வீரர்கள் மீது சீன கடற்படை சோனார் தாக்குதல்களை மேற்கொண்டது என அவுஸ்திரேலியா குற்றம்சாட்டியுள்ளது.
எச்எம்ஏஎஸ் டுவூம்பா ஜப்பானின் விசேட கடல்வலயத்திற்கு காணப்பட்டவேளை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
ஐக்கியநாடுகளின் தடைகளை நடைமுறைப்படுத்தும் முயற்சியில் அவுஸ்திரேலிய கடற்படை கலம் ஈடுபட்டிருந்தவேளை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மீன்பிடிவலைகளை அகற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை சீனாவின் நாசகாரி அவுஸ்திரேலிய கப்பலை நோக்கி நகர்ந்தது சீன கப்பல் சோனாரை பயன்படுத்தியது அதனால் அவுஸ்திரேலிய கப்பலின் சுழியோடிகளுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை காணப்பட்டது எனவும் அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக சுழியோடிகள் அங்கிருந்து வெளியேறினர் இதன் போது சுழியோடிகளுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டன எனவும் அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM