இறுதிப்போட்டி தோல்விக்கு பின்னர் ஓய்வறையில் இந்திய அணியினர் மனமுடைந்து அழுதனர் என பயிற்றுவிப்பாளர் ராகுல்டிராவிட் தெரிவித்துள்ளார்..
ஞாயிற்றுக்கிழமை அவுஸ்;திரேலியா இறுதிப்போட்டியில் வெற்றிபெற்றவேளை முகமட் சிராஜ் கண்ணீரை அடக்க முடியாமல் மைதானத்திலேயே அழுதார்.
இந்திய அணித்தலைவர் ரோகித்சர்மாவும் நீர் திரண்ட விழிகளுடன் மைதானத்திலிருந்து அவசரமாக வெளியேறினார்.
இறுதியில் ஆறுவிக்கெட்தோல்விக்கு பின்னர் இந்திய அணியினர் உடைந்துபோயுள்ளனர் என இந்திய அணியின் பயிற்றுவிப்பாளர் ராகுல்டிராவிட் தெரிவித்துள்ளார்.
ஆம் ரோகிட்சர்மா பலத்த ஏமாற்றத்துடன் உள்ளார்,ஓய்வறையில் ஏனைய வீரர்களும் அவ்வாறான மனோநிலையிலேயே உள்ளனர் பெருமளவு உணர்ச்சிவெளிப்பாடுகள் ஓய்வறையில் காணப்பட்டன.
அணியின் பயிற்றுவிப்பாளராக அதனை பார்ப்பதற்கு கடினமாக உள்ளது அவர்கள் எவ்வளவு தூரம் கடினமாக முயற்சி செய்தார்கள் என்பது எனக்கு தெரியும் அவர்கள் என்ன தியாகங்களை செய்துள்ளார்கள் என்பதும் எனக்கு தெரியும் எனவும் டிராவிட் தெரிவித்துள்ளார்
அதனை பார்ப்பது கடினமாக உள்ளது ஏனென்றால் ஒவ்வொரு வீரரையும் எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும் ஆனால் இதுதான் விளையாட்டு - இது நடக்கலாம் சிறந்த அணி இறுதியில் வெற்றிபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாளை காலை சூரியன் நிச்சயமாக வரும் நாங்கள் கற்றுக்கொள்வோம் அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு ஏனையவர்களை போல முன்னோக்கி நகர்வோம் எனவும் குறிப்பிட்டுள்ள டிராவிட் ஒரு விளையாட்டு வீரராக இதனையே நீங்கள் செய்வீர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM