இந்திய – அவுஸ்திரேலிய அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் இன்று ஆரம்பமாகியது.
இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி, முதலில் துடுப்பெடுத்தாட முடிவுசெய்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிவரும் அவுஸ்திரேலிய அணி 53 ஓட்டங்களைப்பெற்று ஆடிவருகின்றது.
ஸ்மித் தலைமையிலான அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி சமீப காலமாக டெஸ்ட் போட்டிகளில் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது.
இலங்கை (2-1), தென்னாபிரிக்கா (3–0), மேற்கிந்தியத் தீவுகள் (2-0), நியூஸிலாந்து (3–0), இங்கிலாந்து (4-0), பங்களாதேஷ் (1–0) ஆகிய அணிகளுக்கு எதிராக தொடர்ச்சியாக 6 டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளது.
இந்நிலையில் தற்போது அவுஸ்திரேலியாவை வீழ்த்தி 7ஆவது டெஸ்ட் தொடரை தொடர்ச்சியாக வெல்லும் ஆர்வத்தில் இந்திய அணி களமிறங்கியுள்ளது.
இந்திய அணி கடைசியாக கடந்த 2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கையில் நடந்த டெஸ்டில் இலங்கையிடம் 63 ஓட்டங்களால் தோற்றது. அதன்பிறகு விளையாடிய 19 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியை சந்திக்கவில்லை.
தோல்வியை சந்திக்காமல் விளையாடிவரும் இந்திய அணியின் சாதனை அவுஸ்திரேலிய தொடரிலும் நீடிக்குமா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
அவுஸ்திரேலிய அணி கடைசியாக 2013-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு சென்றபோது 4 டெஸ்ட் போட்டிகளிலும் தோற்று வைட் வொஷ் ஆனது. இந்த முறையாவது இந்தியாவை வென்றுவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் அந்த அணி இருக்கிறது.
இந்நலையில் யார் இப் போட்டியில் ஆதிக்கம் செலுத்துவது என்னு பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM