யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை வல்வை சிவன் கோயிலில் சக்கரவாக பட்சியின் சூரபத்மன் வதைபடலம் நேற்று (18) இடம்பெற்றன.
கந்தபுராணத்தில் குறிப்பட்டுள்ளதற்கு அமைய, சூரபத்மன் முருகனுடனான போரில், தனது இந்திரஜால தேர் முருகனால் பறிக்கப்பட்டதன் பின் தனது வில்லும் உடைக்கப்பட்ட கோபத்தில், சூரபத்மன் தன் தவத்தால் சிவபெருமானிடம் வாங்கிய சூலாயுதத்தை கொண்டு பெரிய சிங்கம் ஒன்றிலே ஏறி முருகனுடன் போர் செய்யும்போது முருகன் தான் கொண்டுள்ள வஜ்ராயுதத்தால் சூரனின் சூலாயுதத்தை பறித்து அம்புகளால் சிங்கத்தினையும் கொல்கிறார்.
இதனால் மிகுந்த கோபமுற்ற சூரபத்மன் மிகக் கொடிய தோற்றம் கொண்ட சக்கரவாக பட்சி வடிவம் கொண்டு பறந்து திரிந்து சண்டையிடுகிறார்.
வல்வை சிவன் கோயிலில் கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்கு முன்பாகவே பெரிய செயற்கையான சக்கரவாக பட்சி ஒன்று செய்யப்பட்டுள்ளதோடு, சூர சம்ஹார நாளில் அவ்வப்போது போர் புரியவும் விடப்பட்டுள்ளது.
கந்தபுராணம் சூரபத்மன் வதைபடலத்தில் இந்த காட்சி (பாடல் 350 - 392) காணப்படுகிறது.
இந்த உற்சவத்தினை ஆலய பிரதம குரு மனோகர குருக்கள் நடாத்திவைத்தார்.
இதனை காண்பதற்காக பல பாகங்களில் இருந்து வருகைதந்த பக்தர்கள் புடைசூழ்ந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM