2023 ஆம் ஆண்டுக்காள ஐ.சி.சி. உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இந்தியாவின் நரேந்திர மோடி விளையாட்டரங்கில் இடம்பெற்று வருகின்றது.
இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன.
இப் போட்டியில் இந்திய அணி துடுப்பெடுத்தாடிக்கொண்டிருக்கும் போது உலகின் கவனத்தை ஈர்த்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
போட்டியின் போது பாலஸ்தீன ஆதரவாளர் ஒருவர் திடீரென மைதானத்திற்குள் ஓடிச் சென்று கோஹ்லியை கட்டிப்பிடித்தார். இதனால் போட்டி சற்று நேரம் தடைப்பட்டது.
போட்டியின் 13வது ஓவரின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் பாலஸ்தீன கொடியுடன் 'Free Palestine" என்ற வாசகம் எழுதிய ரீசேர்ட்டுடன் மைதானத்திற்குள் ஓடிச் சென்று இந்திய வீரர் கோஹ்லியை கட்டிப்பிடித்தார்.
இதன்போது சாதுரியமாக செயற்பட்ட கோஹ்லி அதிலிருந்து விலகிச்சென்றார்.
உடனடியாக செயற்பட்ட மைதான பாதுகாப்பு பிரிவினர் குறித்த நபரை மைதானத்தில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM