ஹட்டனில் தந்தை செல்வாவின் 125ஆவது ஜனன தின நிகழ்வு

19 Nov, 2023 | 01:56 PM
image

தந்தை செல்வா என்றழைக்கப்படும் அமரர் செல்வநாயகத்தின் 125ஆவது ஜனன தினம் நேற்று (18) காலை 10:30 மணியளவில் ஹட்டன் பழைய கிருஸ்ண பவன் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வின்போது மலையக உரிமைகளுக்காக போராடியவர்களுக்காக ஈகைச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டு, மலையகத்துக்காக முதன்மை குரல் எழுப்பிய தந்தை செல்வநாயகத்தின் நினைவுகூரல்  நிகழ்வுகள் ஆரம்பமாயின.

வரவேற்புரை, தலைமையுரை என்பவற்றை தொடர்ந்து நினைவுரைகளை தந்தை செல்வாவின் பேரனார் சா.செ.ச. இளங்கோ, மலையக பேராசிரியர் விஜயசந்திரன், மலையக மக்கள் முன்னணி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன், 'வடக்கு கிழக்கும் மலையகமும்' எனும் தலைப்பில் அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கணபதி கனகராஜ், சமூக செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான இரா.சுப்பிரமணியம், 'மலையகமும் பெண்களும்' எனும் தலைப்பில் ஜீவா சதாசிவம் ஆகியோர் வழங்கினர். 

இந்த நிகழ்வில் மலையக தொழிற்சங்கவாதிகள், சமூக ஆர்வலர்கள், அரசியல் பிரதிநிதிகள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய...

2024-09-10 11:02:28
news-image

யாழ். கொக்குவில் கிழக்கு நாமகள் வித்தியாலயத்தின்...

2024-09-10 10:42:19
news-image

கொட்டாஞ்சேனை கதிரேசன் வீதி, புனித வேளாங்கன்னி...

2024-09-09 23:15:12
news-image

கொழும்பு பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்க விநாயகர்...

2024-09-09 21:54:22
news-image

நுவரெலியா ஹாவாஎலிய ஸ்ரீ கருமாரியம்மன் ஆலய...

2024-09-09 17:48:29
news-image

நுவரெலியா ஸ்ரீ மதுர கணபதி கோவிலில்...

2024-09-07 13:37:25
news-image

பர்ஹான் முஸ்தபாவின் "மரக்கல மீகாமன்" நூல்...

2024-09-07 13:32:14
news-image

பிலியந்தலை விளையாட்டுக் கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள்...

2024-09-07 14:19:14
news-image

HWPL உலக சமாதான உச்சிமாநாட்டின் 10...

2024-09-09 19:48:46
news-image

"எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் பிரைவெட் லிமிட்டெட்...

2024-09-05 18:08:24
news-image

யாழ். தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில்...

2024-09-04 18:02:31
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திருக்கல்யாண உற்சவம்

2024-09-04 17:37:08