(அஹமதாபாத்திலிருந்து நெவில் அன்தனி)
13ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் சம்பியனாகப் போகும் அணி எது என்பது இன்னும் 8 மணித்தியாலங்களுக்குள் தீர்மானிக்கப்படவுள்ள நிலையில் இந்தியாவும் அவுஸ்திரேலியாவும் இன்னும் சற்று நேர்த்தில் ஆரம்பமாகவுள்ள இறுதிப் போட்டியில் மோதவுள்ளன.
இந்த இறுதிப் போட்டியைக் கண்டுகளிக்க அரங்கில் சுமார் ஒரு இலட்சம் இரசிகர்கள் குழுமியிருப்பதுடன் இன்னும் நூற்றுக்கணக்கான இரசிகர்கள் அரங்கை நோக்கி வந்துவண்ணம் உள்ளனர்.
அஹமதாபாத் நரேந்த்ர மோடி விளையாட்டரங்கில் நடைபெறும் இந்த இறுதிப் போட்டிக்கான நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணித் தலைவர் பெட் கமின்ஸ் தனது அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடும் என அறிவித்தார்.
நான்கு வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் இடம்பெற்ற ரோஹித் ஷர்மா, விராத் கோஹ்லி, ரவிச்சந்திரன் அஷ்வின், ரவிந்த்ர ஜடேஜா, மொஹமத் ஷமி ஆகிய ஐவர் இந்த வருட இந்திய குழாத்திலும் இடம்பெறுகின்றனர்.
அவர்களில் ரவிச்சந்திரன் அஷ்வின் ஒரு போட்டியில் மாத்திரமே விளையாடியுள்ளார்.
மேலும் இந்த வருட உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் விராத் கோஹ்லி 711 ஓட்டங்களை மொத்தமாக பெற்றுள்ளதுடன் மொஹமத் ஷமி 23 விக்கெட்களை மொத்தமாக வீழ்த்தி முறையே துடுப்பாட்டத்திலும் பந்துவீச்சிலும் முன்னிலையில் இருக்கின்றனர்.
2015இல் உலக சம்பியனான அவுஸ்திரேலிய அணியில் இடம்பெற்ற டேவிட் வோர்னர், மிச்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், க்லென் மெக்ஸ்வெல், மிச்செல் ஸ்டார்க், பெட் கமின்ஸ், ஜொஷ் ஹேஸ்ல்வூட் ஆகியோர் இந்த வருட இறுதிப் போட்டியிலும் விளையாடுகின்றனர்.
உலகக் கிண்ண வரலாற்றில் க்லென் மெக்ஸ்வெல் முதலாவது இரட்டைச் சதத்தைக் குவித்து அசத்தியதுடன் அடம் ஸம்ப்பா 22 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார்.
இந்திய விமானப் படையினரின் சாகசங்கள், பிரபல கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து உலகக் கிண்ண இறுதிப் போட்டி ஆரம்பமாகவுள்ளது.
அணிகள்
இந்தியா: ரோஹித் ஷர்மா (தலைவர்), ஷுப்மான் கில், விராத் கோஹ்லி, ஷ்ரேயாஸ் ஐயர், கே. எல். ராகுல், ரவிந்த்ர ஜடேஜா, சூரியகுமார் யாதவ், குல்தீப் யாதவ், மொஹமத் ஷமி, ஜஸ்ப்ரிட் பும்ரா, மொஹமத் சிராஜ்.
அவுஸ்திரேலியா: டேவிட் வோர்னர், ட்ரவிஸ் ஹெட், மிச்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மானுஸ் லபுஷேன், க்லென் மெக்ஸ்வெல், ஜொஷ் இங்லிஸ், மிச்செல் ஸ்டாக், பெட் கமின்ஸ், அடம் ஸம்ப்பா, ஜொஷ் ஹேஸ்ல்வூட்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM