உலக சம்பியன் யார் ? இந்தியா - அவுஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை

Published By: Vishnu

19 Nov, 2023 | 12:27 PM
image

உலக சம்பியன் யார் என்பதைத் தீர்மானிக்கும் இந்தியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான இறுதிப் போட்டி அஹமதாபாத் நரேந்த்ர மோடி விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெறவுள்ளது.

இந்த வருட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை முன்னின்று நடத்தும் வரவேற்பு நாடான இந்தியா, தான் விளையாடிய 10 போட்டிகளிலும் அபார வெற்றிகளை ஈட்டி இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.

லீக் சுற்றில் 9 போட்டிகளிலும் இலகுவாக வெற்றியீட்டிய இந்தியா, மும்பை வான்கடே விளையாட்டர்ஙகில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற முதலாவது அரை இறுதிப் போட்டியில் நியூஸிலாந்தை 70 ஓட்டங்களால் வீழ்த்தியது.

கணிசமான மொத்த எண்ணிக்கைகள் பெறப்பட்ட அப் போட்டியில் இந்தியா 50 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 397 ஓட்டங்களைக் குவித்ததுடன் நியூஸிலாந்து 48.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 327 ஓட்டங்களைப் பெற்றது.

கபில் தேவின் தலைமையில் இங்கிலாந்தில் 1983இலும் எம்.எஸ். தோனி தலைமையில் தனது சொந்த மண்ணில் 2011இலும் உலக சம்பியனான இந்தியா, மூன்றாவது தடவையாக உலக சம்பியனாகும் குறிக்கோளுடன் இறுதிப் போட்டியை எதிர்கொள்ளவுள்ளது.

இதேவேளை, இந்த வருட உலகக் கிண்ண கிரிக்கெட்டில் முதல் இரண்டு லீக் போட்டிகளில் தோல்வி அடைந்த அவுஸ்திரேலியா அதன் பின்னர் 7 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றியீட்டி அரை இறுதிக்கு முன்னேறியிருந்தது.

கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய அரை இறுதிப் போட்டில் தென் ஆபிரிக்காவை 3 விக்கெட்களால் அவுஸ்திரேலியா வெற்றிகொண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

அலன் போர்டர் தலைமையில் இந்தியாவில் 1987இலும் ஸ்டீவ் வோ தலைமையில் இங்கிலாந்தில் 1999இலும் ரிக்கி பொன்டிங் தலைமையில் தென் ஆபிரிக்காவில் 2003இலும் மீண்டும் ரிக்கி பொன்டிங் தலைமையில் மேற்கிந்தியத் தீவுகளில் 2007இலும் மைக்கல் க்ளார்க் தலைமையில் தனது சொந்த நாட்டில் 2015இலும் அவுஸ்திரேலியா சம்பியனாகியிருந்தது.

இந் நிலையில் 6ஆவது உலக சம்பியன் பட்டத்தை சுவீகரிக்கும் கங்கணத்துடன் அவுஸ்திரேலியா இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளது.

இந்த இரண்டு அணிகளும் 2003 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் சந்தித்துக்கொண்டபோது 125 ஓட்டங்களால் அவுஸ்திரலியா இலகுவாக வெற்றியீட்டி சம்பியனாகியிருந்தது.

இப்போது 20 வருடங்கள் கழித்து இரண்டாவது தடவையாக இந்தியாவும் அவுஸ்திரேலியாவும் உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் சந்திக்கவுள்ளன.

45 லீக் போட்டிகள், 2 அரை இறுதிப் போட்டிகள் முடிவடைந்த நிலையில் 2023 உலகக் கிண்ண கிரிக்கெட் சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியை 130,000 பார்வையாளர்களைக் கொள்ளலவாகக் கொண்ட அஹமதாபாத் நரேந்த்ர மோடி விளையாட்டரங்கு ஞாயிறன்ற அரங்கேற்றவுள்ளது.

இம்முறை உலகக் கிண்ண கிரிக்கெட் லீக் சுற்றில் இந்தியாவும் அவுஸ்திரேலியாவும் சந்தித்துக்கொண்டபோது இந்தியா 6 விக்கெட்களால் மிக இலகுவாக வெற்றியீட்டி இருந்தது. இரண்டு அணிகளுக்கும் அந்தப் போட்டியே இந்த வருட உலகக் கிண்ணத்தில் முதலாவது போட்டியாக அமைந்தது.

அப் போட்டியில் 3 சுழல்பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தி அவுஸ்திரேலியாவை 199 ஓட்டங்களுக்கு இந்தியா கட்டுப்படுத்தியது.

ஆனால், இந்தியா பதிலுக்கு துடுப்பெடுத்தாடியபோது ரோஹித் ஷர்மா, இஷான் கிஷான், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய மூவரும் ஓட்டம் பெறாமல் ஆட்டம் மொத்த எண்ணிக்கை வெறும் 2 ஓட்டங்களாக இருந்தது.

விராத் கோஹ்லி, கே.எல். ராகுல் ஆகியோர் அரைச் சதங்களைக் குவித்து இந்தியாவின் வெற்றியை இலகுவாக்கினர்.

ஆனால், அந்தப் போட்டி முடிவை வைத்து இறுதிப் போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என எதிர்வுகூற முடியாது.

இரண்டு அணிகளிலும் உலகத் தரம்வாய்ந்த துடுப்பாட்ட வீரர்களும் பந்துவீச்சாளர்களும் இடம்பெறுவதால் இறுதிப் போட்டி விறுவிறுப்பைத் தோற்றுவிக்கும் என எதிர்பார்க்கலாம்.

எவ்வாறாயினும் இரண்டு அணிகளினதும் துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் பந்துவீச்சாளர்களை ஒப்பிடும்போது இந்தியர்கள் முன்னிலையில் இருப்பதை அவதானிக்கலாம்.

இந்திய அணியில் விராத் கோஹ்லி (3 சதங்கள், 5 அரைச் சதங்களுடன் 711 ஓட்டங்கள்), ரோஹித் ஷர்மா (ஒரு சதம், 3 அரைச் சதங்களுடன் 550), ஷ்ரேயாஸ் ஐயர் (2 சதங்கள், 3 அரைச் சதங்களுடன் 526), கே.எல். ராகுல் (ஒரு சதம், ஒரு அரைச் சதத்துடன் 386), ஷுப்மான் கில் (4 அரைச் சதங்களுடன் 350) ஆகியோர் துடுப்பாட்டத்திலும்

மொஹமத் ஷமி (மூன்று 5 விக்கெட் குவியல்களுடன் 23 விக்கெட்கள்), ஜஸ்ப்ரிட் பும்ரா (18), ரவிந்த்ர ஜடேஜா (16), குல்தீப் யாதவ் (15), மொஹமத் சிராஜ் (13) ஆகியோர் பந்துவீச்சிலும் மிகத் திறமையாக செயற்பட்டுள்ளனர்.ஷ

அவுஸ்திரேலிய அணியில் டேவிட் வோர்னர் (2 சதங்கள், 2 அரைச் சதங்களுடன் 528 ஓட்டங்கள்), மிச்செல் மார்ஷ் (2 சதங்கள், 1 அரைச் சதத்துடன் 426), க்லென் மெக்ஸ்வெல் (2 சதங்களுடன் 398) மானுஸ் லபுஷேன் (2 அரைச் சதங்களுடன் 304) ஆகியோர் துடுப்பாட்டத்திலும்

அடம் ஸம்ப்பா (22 விக்கெட்கள்), ஜொஷ் ஹேஸ்ல்வூட் (14), மிச்செல் ஸ்டார்க் (13), பெட் கமின்ஸ் (13) ஆகியார் பந்துவீச்சிலும் பிரகாசித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூஸிலாந்து 340 ஓட்டங்கள்; 2ஆவது இன்னிங்ஸில்...

2024-09-20 12:31:21
news-image

மகளிர் ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை...

2024-09-20 12:21:22
news-image

லெதம், வில்லியசன் அரைச் சதங்கள் குவிப்பு:...

2024-09-19 19:51:43
news-image

சென்னையில் பிறந்த அஷ்வினும் சென்னையுடன் ஒட்டிக்கொண்ட...

2024-09-19 19:47:33
news-image

டெஸ்ட் கிரிக்கெட் உலக சாதனை ஒன்றை...

2024-09-19 17:08:04
news-image

தகாத நடத்தையில் ஈடுபட்டார் - இலங்கை...

2024-09-19 12:56:32
news-image

தென் ஆபிரிக்காவை சர்வதேச கிரிக்கெட்டில் முதல்...

2024-09-19 10:30:39
news-image

இந்தியா - பங்களாதேஷ் டெஸ்ட் தொடர்...

2024-09-19 10:11:26
news-image

கமிந்து மெண்டிஸின் துடுப்பாட்ட ஆற்றல் தொடர்கிறது,...

2024-09-18 18:22:18
news-image

ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான பரிசுத் தொகை...

2024-09-18 16:51:08
news-image

நியூஸிலாந்துடனான முதலாவது டெஸ்ட்: முதலாம் நாள்...

2024-09-18 12:34:13
news-image

நியூசிலாந்துக்கு எதிரான போட்டி : இலங்கை...

2024-09-17 22:27:53