சீனாவில் வெளிப்பட்ட ஐ.தே.க : பொதுஜன பெரமுன ஒற்றுமை : வாயடைத்துப் போன பங்களாதேஷ் பிரதிநிதிகள்

19 Nov, 2023 | 11:13 AM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

சீனாவின் ஒரு சாலை ஒரு மண்டலம் முன்முயற்சி திட்டத்தின் 10வது ஆண்டு விழாவை முன்னிட்டு ஆசியாவின் நட்பு நாடுகளின் அரசியல் கட்சிளின் பிரதிநிதிகளுக்காக யுனான் மாகாணத்தில் குன்மிங்  நகரில் விசேட நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடந்த வாரத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள தேசியவாத கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துக்கொண்டிருந்தனர்.    

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் உள்ளிட்ட ஏனைய ஆசிய நாடுகளின் பலரும் இந்த நிகழ்வில் இலங்கை சார்பில் கலந்துக்கொண்டிருந்தனர். கடந்த பத்து வருட கால மீளாய்வுகள் மற்றும் அடுத்த 10 வருடத்திற்கான திட்டங்கள் தொடர்பில் இந்த நிகழ்வில்  கலந்துரையாடப்பட்டது.

வரவேற்பு நிகழ்வின் போது  பாலித ரங்கே பண்டாரவின் பெயரை சீன அறிவிப்பாளர், தவறுதலாக 'ரேன்ஜ் பண்டார' என்று அழைத்தார். இதனை தொடர்ந்து அங்கிருந்த இலங்கை பிரிநிதிகள் பேரொலியுடன் சிரித்தனர். இதனை சற்றும் எதிர்பாராத ஏனைய ஆசிய நாடுகளின் பிரதிநிதிகளும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகளும் ' ஏன் சிரிக்கின்றீர்கள்' என்று வினாவினர். பாலித ரங்கே பண்டாரவின் பெயரை தவறாக உச்சரித்தமையை எடுத்துரைத்து தெளிவுப்படுத்தினர்.

இவ்வாறானதொரு நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசத்தின் பிறந்த தினம் சீனாவின் நிகழ்வு இடம்பெற்ற கடந்த 13 ஆம் திகதியே காணப்பட்டமையினால் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள் அவருக்காக 'பிறந்த தின கேக்' ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

இதன் போது ஐக்கிய தேசிய கட்சியின் பாலித ரங்கே பண்டார உள்ளிட்ட இலங்கையின் ஏனைய பிரதிநிதிகள் ஒன்றாக சாகர காரியவசத்துடன் 'கேக் வெட்டி' பிறந்த தினத்தை கொண்டாடியதை பார்த்து பங்களதேஷ் ஆவாமி லீக் கட்சியின் பிரதிநிதி ஆச்சரியத்துடன் 'எப்படி இவ்வாறு ஒன்றாக இருக்கின்றீர்கள்' என்று வினாவினார்.

அரசியல் கொள்கைகள் அடிப்படையில்  உள்நாட்டில் மோதிக் கொண்டாலும் இவ்வாறு வெளிநாடுகளுக்கு வந்தால் ஒற்றுமையாக இருப்போம் என்று இலங்கை பிரதிநிதிகள் கூற, சீன மற்றும் பங்களதேஷ் உள்ளிட்ட ஏனைய நாடுகளின் பிரதிநிதிகள் வியப்படைந்தனர். பங்களதேஷில் உங்களது அரசியல் இல்லை என்று ஆவாமி லீக் கட்சியின் பிரதிநிதி பாலித ரயங்கே பண்டாரவை நோக்கி இதன் போது கூற அங்கிருந்தவர்கள் கூர்மையாக அவதானிக்க தொடங்கினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதுக்குடியிருப்பில் பாடசாலை மாணவி துஷ்பிரயோகம் மூவர்...

2025-01-13 15:13:06
news-image

கிளிநொச்சியில் களைகட்டும் பொங்கல் வியாபாரம்

2025-01-13 15:06:59
news-image

பொலன்னறுவையில் பேஸ்புக் களியாட்டம் ; 10...

2025-01-13 13:26:48
news-image

யாழ். மருதங்கேணி நிதி நிறுவனத்தில் மோசடி...

2025-01-13 13:23:18
news-image

யாழில் 200 போதை மாத்திரைகளுடன் இரு...

2025-01-13 13:20:30
news-image

ஊடகவியலாளர்களிற்கு எதிரான வன்முறைகள் குறித்த விசாரணைகளை...

2025-01-13 13:18:54
news-image

வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட முன்னாள் பொலிஸ்...

2025-01-13 13:08:56
news-image

நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல்...

2025-01-13 13:05:18
news-image

மோட்டார் சைக்கிள் - இ.போ.ச பஸ்...

2025-01-13 12:42:49
news-image

கார் மோதி இரண்டு எருமை மாடுகள்...

2025-01-13 12:38:12
news-image

ஹோமாகமவில் பேஸ்புக் களியாட்டம் : 6...

2025-01-13 12:18:28
news-image

மின்னேரியாவில் காட்டு யானை தாக்கி வயோதிபர்...

2025-01-13 12:11:32