(எம்.நியூட்டன்)
மார்கழி இசை விழாவும் வட மாகாணத்தைச் சேர்ந்த சிறிய, நடுத்தர உற்பத்தியாளர்களது உற்பத்தி கண்காட்சியும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 27, 28, 29ஆம் திகதிகளில் யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெறவுள்ளது என யாழ்ப்பாணம் வணிகர் கழக தலைவர் தெரிவித்தார்.
யாழ்ப்பாண வணிக கழகத்தில் இன்று (18) சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
தமிழ் மக்களுடைய கலை கலாசார பண்பாடுகளை பாதுகாக்கும் மற்றும் தமிழர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் மார்கழி இசை விழாவும் வட மாகாணத்தைச் சேர்ந்த சிறிய நடுத்தர உற்பத்தியாளர்களது உற்பத்தி கண்காட்சியும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 27, 28, 29ஆம் திகதிகளில் யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தில் நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தின் உட்புற மண்டபத்தில் இசைவிழாவும், வெளிப்புற திடலில் சிறிய, நடுத்தர உற்பத்தியாளர்களது உற்பத்தி கண்காட்சியும் விற்பனையும் இடம்பெறும்.
வெளிநாட்டு சந்தைவாய்ப்பினை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இலங்கை ஏற்றுமதி அதிகார சபை மற்றும் ஏற்றுமதி துறை சார்ந்த பல அனுபவம் வாய்ந்த ஏற்றுமதியாளர்கள் எல்லோரையும் இதில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்துள்ளோம்.
முக்கிய விடயமாக, இதன்போது இந்தியாவில் இருந்து சிறிய, நடுத்தர உற்பத்தியாளர்களது உற்பத்திகளுக்கு தேவையான இயந்திரங்களை புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய இயந்திரங்களை காட்சிப்படுத்தவும் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வுகளில் பொதுமக்கள் பங்குபற்றி பயன்பெற முடியும்.
இந்நிகழ்வுகளில் யாழ். மாவட்டம் மாத்திரமல்லாது வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த கலைஞர்கள் மற்றும் உள்ளூர் உற்பத்தியாளர்களும் பங்குபற்ற முடியும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM