Sun Siyam Resorts இன் கீழ் காணப்படும் புட்டிக் ஹோட்டல் தொடரின் பெருமைக்குரிய அங்கமாக அமைந்துள்ள இலங்கையின் Sun Siyam பாசிக்குடா, 2023 நவம்பர் 17ஆம் திகதி முதல் தனது செயற்பாடுகளை மீள ஆரம்பித்துள்ளதாக அறிவிப்பதில் பெருமை கொள்கின்றது. விருந்தினர்களுக்கு நவீன சொகுசான அனுபவங்களை பெற்றுக் கொடுக்கும் வகையில் நவீன மயமாக்கலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில், விருந்தினர்களுக்கு சொகுசான அனுபவத்தை வழங்குவதுடன், இலங்கையின் கலாசார பெறுமதிகளை உணர்த்தும் வகையிலும் அமைந்திருக்கும்.
Sun Siyam பாசிக்குடாவின் பொது முகாமையாளர் அர்ஷத் ரிஃபாய், ஹோட்டல் பொது மக்களுக்காக மீளத் திறக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார். உள்நாட்டு சமூகத்தாருக்கு ஆதரவளித்து வாய்ப்பளிப்பதற்கான தமது உறுதியான அர்ப்பணிப்பு தொடர்பில் அவர் தெரிவித்திருந்ததுடன், குறிப்பாக பலகைசார் மரத்தளபாட செயற்பாடுகளில் உள்ளூர் சமூகத்தாரின் ஆதரவைப் பெற்றிருந்தமை தொடர்பில் குறிப்பிட்டிருந்தார். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மற்றும் உள்நாட்டிலிருந்து பெறப்பட்ட தயாரிப்புகளினூடாக ஹோட்டலின் நவீனமயமாக்கல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததாகவும், உள்நாட்டு கலைஞர்கள் மற்றும் சமூகத்தாருடன் இணைந்து தளபாடங்கள், செடிவிளக்குகள் (chandeliers) மற்றும் மூட்டுவேலைப்பாடுகள் (joinery) போன்றவற்றை முன்னெடுத்திருந்ததாகவும் அர்ஷத் குறிப்பிட்டார்.
இந்த ஹோட்டலில் பெருமளவு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், வர்ண அமைப்புகள் முதல் சாதனங்கள் மற்றும் பொருத்திகள் போன்றன வரையில் அனைத்து அம்சங்கள் மாற்றப்பட்டிருந்த போதிலும், ஹோட்டலின் அசல் கட்டமைப்பில் எவ்விதமான மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை. இலங்கையின் அழகுடன் ஆழமாக கலந்த மனம் மறவாத அனுபவங்களை பெற்றுக் கொடுப்பதற்கான Sun Siyam பாசிக்குடாவின் செயற்பாடுகளில் புதிய அத்தியாயமாக இந்த மீளத் திறப்பு அமைந்துள்ளது.
2014 ஆம் ஆண்டில் Sun Aqua பாசிக்குடா எனும் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஹோட்டல், 2020 ஆம் ஆண்டில் மீளவர்த்தக நாம பெயரிடலுக்குட்படுத்தப்பட்டு Sun Siyam ரிசோர்ட்ஸ் ஹோட்டல் தொடரின் அங்கமாக, Sun Siyam பாசிக்குடா எனப் பெயர் மாற்றப்பட்டது.
Sun Siyam ரிசோர்ட்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி தீபக் பூநேடி கருத்துத் தெரிவிக்கையில், “இந்த ரிசோர்ட் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தமை மற்றும் அதனைத் தொடர்ந்து உலகளாவிய ரீதியில் காணப்பட்ட தொற்றுப் பரவல் ஆகியவற்றினால், இந்த ஹோட்டலை முழுமையாக மெருகேற்றம் செய்வதற்கான பெறுமதி வாய்ந்த வாய்ப்பு கிடைத்திருந்தது. Studio Sixty7 உடன் கைகோர்த்து, ஆரம்ப கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தாமல், மொத்த ஹோட்டலையும் நாம் மீள வடிவமைப்பு செய்திருந்தோம்.” என்றார்.
தீபக் மேலும் தெரிவிக்கையில், “சேவை வழங்கல்கள் மற்றும் வசதிகள் முதல் சேவை மட்டம் வரையில் அனுபவத்தை நாம் மாற்றியமைத்துள்ளதுடன், புகழ்பெற்ற Sun Siyam நோக்கத்துடன் ஒன்றிணையச் செய்துள்ளோம். புகழ்பெற்ற Sun Siyam ரிசோர்ட் புட்டிக் தெரிவுகளில் ஒன்றாக இந்த ஹோட்டலையும் மீள அறிமுகம் செய்வதையிட்டு நாம் பெருமை கொள்வதுடன், இலங்கையின் இந்த பகுதியின் சிறப்பம்சங்களை அனுபவிப்பதற்கு வருமாறு அனைத்து விருந்தினர்களையும் அன்புடன் அழைக்கின்றோம்.” என்றார்.
ஐந்து நட்சத்திர புட்டிக் ஹோட்டல், இலங்கையின் மாசற்ற கிழக்கு கரையோரப் பகுதியில் அமைந்துள்ளது. கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சுமார் ஆறு மணி நேரத்தில் பயணிக்கக்கூடியதாக இருக்கும். 34 இடவசதிகளைக் கொண்ட ஒன்று முதல் இரண்டு படுக்கையறைகள், பூந்தோட்டப் பகுதி அல்லது கடற்கரை பெவிலியன்கள், நீச்சல் தடாகத்துடன் அல்லது நீச்சல் தடாகமின்றி பெற்றுக் கொள்ள முடிவதுடன், ஜோடியாக, குடும்பமாக அல்லது நண்பர்கள் குழுவாக பயணிப்போருக்கு பிரத்தியேகமான கரையோர அனுபவத்தை உறுதி செய்வதாக Sun Siyam பாசிக்குடா அமைந்திருக்கும்.
உள்ளக வடிவமைப்பு மறுசீரமைப்பில் முக்கிய பங்காற்றியிருந்த Studio Sixty7இன் ஸ்தாபகர்களும் புத்தாக்க பணிப்பாளர்களுமான லீ மெக்நிகோல் மற்றும் ஜோஸ் ரிவேரோ ஆகியோர் கருத்துத் தெரிவிக்கையில், “Sun Siyam ரிசோர்ட்களுடன் இணைந்து Sun Siyam பாசிக்குடாவின் மறுபிறப்பை வெளிப்படுத்துவதில் Studio Sixty7 மிகவும் மகிழ்ச்சியடைகின்றது. இந்த ஹோட்டல் திட்டத்துக்கான எமது வடிவமைப்பு கொள்கையானது, 5 நட்சத்திர புட்டிக் உள்ளக அலங்காரத்துடன், மொனோகுரோமெட்டிக் உள்ளக வடிவமைப்பை ஏற்படுத்துவதாக அமைந்திருந்தது. இந்த திட்டத்தை வடிவமைக்கும் போது, பாசிக்குடா கரையோரப் பகுதியில் பிரத்தியேகமான, மதிநுட்பமான மற்றும் கண்கவர் உள்ளக அலங்காரத்தை ஏற்படுத்த தீர்மானித்திருந்தோம்.” என்றனர்.
அவர்கள் மேலும் குறிப்பிடுகையில், “இந்த ஹோட்டலுக்கான தளபாடங்கள் மற்றும் இணைப்பு பொருத்திகளை உருவாக்குகையில் உள்ளூர் கலைஞர்கள் மற்றும் அங்கத்தவர்களுடன் பணியாற்ற கிடைத்தமை சிறப்பம்சமாகும். அதனூடாக இலங்கையின் அழகு இந்த ஹோட்டல் அலங்கார வடிவமைப்பினூடாக வெளிப்படுத்தபடுவதை உறுதி செய்ய முடிந்திருந்தது. ஈடுபாட்டை பேணியிருந்த அனைவரின் அன்பின் வெளிப்பாடாக இந்த திட்டம் அமைந்துள்ளதுடன், இலங்கையில் பார்வையிட வேண்டிய ஒரு பகுதியாக இந்த ஹோட்டலை வடிவமைக்க முடிந்தது. அனைவரும் இந்த அனுபவத்தை பெற்றுக் கொள்ள வருமாறு நாம் அழைக்கின்றோம்.” என்றார்.
Sun Siyam பாசிக்குடா, இந்த மனம்மறவாத அனுபவத்தை பெற்றுக் கொள்ள வருமாறு அழைப்பதுடன், இந்த பண்டிகை மற்றும் விடுமுறைக் காலப்பகுதியில் வழங்கப்படும் சலுகைகளை பற்றி அறிந்து கொள்ளவும், முன்பதிவுகளை மேற்கொள்ளவும் www.sunsiyam.com/sun-siyam-pasikudah/எனும் இணையத்தளத்தை பார்வையிட முடியும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM