நிந்தவூரில் மோட்டார் சைக்கிள் - பஸ் வண்டி மோதி விபத்து : இரு இளைஞர்கள் பலி

Published By: Digital Desk 3

18 Nov, 2023 | 02:19 PM
image

மோட்டார் சைக்கிள் - பஸ் வண்டி விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக  நிந்தவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாட்டுப்பளை பிரதான வீதியில் இன்று வெள்ளிக்கிழமை (17) மாலை மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் பஸ் வண்டி மோதி விபத்துக்குள்ளாகியதில் 23 வயது  இளைஞர்  ஸ்தலத்தில் உயிரிழந்தார்.

பலத்த காயங்களுடன் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மற்றுமொரு இளைஞனான 19 வயது மதிக்கத்தக்கவர்  சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மட்டக்களப்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டி ஒன்றுடன் கல்முனையில் இருந்து அக்கரைப்பற்று நோக்கிச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானது.

மேற்படி, உயிரிழந்த இருவரும் மோட்டார் சைக்கிளில் வேகமாக பயணித்த நிலையில் விபத்திற்குள்ளாகி உள்ளதுடன் விபத்தில் இறந்த இவ்விருவரும் கல்முனை பிரதேச செயலாளர் பிரிவு உட்பட்ட மருதமுனை பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2026-08-08 06:16:04
news-image

ஐக்கிய தேசிய கட்சி கோரிக்கை: சிறைச்சாலை...

2026-08-08 06:14:24
news-image

துஷ்பிரயோக நோக்கங்களைக் கொண்ட நபர்கள், கைதிகளை...

2026-08-08 06:11:13
news-image

ரவி செனவிரத்னவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்குத்...

2026-08-08 05:45:32
news-image

மன்னார் பேசாலையில் பற்றைக்காட்டில் ஆண் ஒருவரின்...

2026-08-08 05:42:37
news-image

சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் பிரதானிகளுக்கு...

2026-08-07 12:20:20
news-image

சிஐடி பணிப்பாளர் ஷானி அபேசேகர பிரதிப்...

2026-08-07 23:54:30
news-image

சிறைச்சாலை வன்முறைகள் அரசாங்கத்தின் திட்டமிட்ட சதியா?...

2026-08-07 16:08:47
news-image

இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் எனக்கு எதிராக...

2026-08-07 14:52:22
news-image

சத்துருக்கொண்டான் படுகொலை முறைப்பாட்டாளரை சிஐடி அழைப்பது...

2026-08-07 15:14:41
news-image

சிறைச்சாலை கட்டமைப்பை பலவீனப்படுத்த சதி: அமைச்சர்...

2026-08-07 16:07:58
news-image

விலை அதிகரிப்புக்கு மத்தியில் அரசின் சமூக...

2026-08-07 15:06:00