"சஷ்டியை நோக்க சரவண பவனார்...!" : கந்த சஷ்டி கவசம் உருவான கதை

18 Nov, 2023 | 01:08 PM
image

ந்த சஷ்டி கவசத்தை உருவாக்கியவர் தென்னிந்தியாவை சேர்ந்த பாலதேவராய சுவாமிகள் எனும் தீவிர முருக பக்தர் ஆவார். 

அவர் ஒரு முறை கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டார். எவ்வளவோ சிகிச்சைகள் மேற்கொண்டும் அவரது வயிற்றுவலி குணமாகவில்லை. வாழ்க்கையே வெறுத்துப் போன நிலையில் தற்கொலை செய்துகொள்ள நினைத்தார். 

கடலில் விழுந்து தன் உயிரை மாய்த்துக்கொள்வதற்காக திருச்செந்தூர் கடலை நோக்கிச் சென்றவர். 

அவர் கடலில் இறங்க முற்பட்ட நேரம் கந்த சஷ்டி விழா நடைபெற்றுக்கொண்டிருந்தது. 

திருச்செந்தூர் ஆலயத்தில் முருகப் பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்துகொண்டிருந்ததை அறிந்தார் பாலதேவராயர். 

இவர் இயல்பாகவே முருகனின் மீது அதீத பக்தி கொண்டவர். ஆகையால், முருகனின் அலங்கார, அபிஷேக காட்சிகளை கண்டுவிட அவர் மனம் துடித்தது. 

கடலில் விழுவதாக இருந்த அவர் தன் முடிவை சற்றே தள்ளிப்போட்டு ஆலயத்துக்குள் பிரவேசித்தார். 

திருவிழா முடிந்ததும் தற்கொலை செய்துகொள்ளலாம் என்று எண்ணியபடி, முருகனின் அலங்கார திருக்காட்சியை கண்டார். 

அவர் மனம் முழுவதிலும் முருகனின் திருக்கோலம் நிறைந்தது. அவர் மனம் முருகனை அருளை நாடியது. உடனே, சஷ்டி விரதம் இருக்க தொடங்கினார். 

கந்த சஷ்டியின் முதல் நாளில் திருச்செந்தூர் கடலில் புனித நீராடினார். செந்தூர் கடல் நீர் அவரது எண்ணத்தை முற்றாக மாற்றியது. 

முதல் நாள் சஷ்டி விரதத்தன்று முருகனை வழிபட்டுக்கொண்டே கோவில் மண்டபத்தில் கண்களை மூடி தியானம் செய்தார். 

அப்போது முருகன் அவரது மனக்கண்ணில் தோன்ற, முருகனின் அருளால் பாடும் வல்லமையை பெற்றார். 

அடுத்த நொடியே பாலதேவராய சுவாமிகள் பக்தி உணர்வில் முதல் அடியாக 

சஷ்டியை நோக்க சரவண பவனர் 

சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்.... 

என்று தனது முதல் சஷ்டி கவசத்தை பாடினார்.

ஆறு படை வீடுகளுக்கும் 6 சஷ்டி கவசங்கள்! 

இன்று வழக்கத்தில் பாடப்படும் சஷ்டி கவசம் திருச்செந்தூர் முருகனுக்காக பாலதேவராயர் 270 வரிகளில் எழுதிய சஷ்டி கவசமாகும். 

ஆனால், பாலதேவராயர் முருகனின் ஆறுபடை வீடுகளில் ஏனைய 5 வீடுகளான திருப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை, திருத்தனி, பழமுதிர்ச்சோலை ஆகியவை பற்றியும் தனித்தனியே சஷ்டி கவசங்கள் எழுதியுள்ளார். என்றாலும், இன்றைய காலகட்டத்தில் பாடப்படுவது திருச்செந்தூர் சஷ்டி கவசமே. அதுவே கந்த சஷ்டி கவசமாக போற்றப்படுகிறது. 

யார் இந்த பாலதேவராயர்?

'சஷ்டியை நோக்க சரவண பவனர்' என்ற சஷ்டி கவசத்தை பாடியவர் பாலதேவராயர்; இது திருச்செந்தூர் முருகனுக்கான சஷ்டி கவசம் என்கிற தகவல் கிடைத்துள்ள போதும், இதை எழுதிய பாலதேவராயர் யார், அவரது பெற்றோர் யார், எந்த காலத்தில் வாழ்ந்தார் என்பது தொடர்பாக உறுதியான தகவல்கள் எதுவும் இல்லை. 

சஷ்டி கவசத்தில் வரும் பல சொற்களை வைத்துப் பார்க்கிறபோது, பாலதேவராயர் பாண்டிய நாட்டை சேர்ந்தவராக இருக்கலாம் என கூறப்படுகிறது. 

கந்த சஷ்டி கவசத்தில் பல சொற்கள் வட மொழிச் சொற்களாக உள்ளன. இதனால் பாலதேவராயர் வடமொழியில் தேர்ச்சி பெற்றவராக இருக்கலாம் என கருதப்படுகிறது. 

சண்முக கவசம் 

சஷ்டி கவசம் போன்று சண்முக கவசமும் கந்த சஷ்டி நாட்களில் பக்திபூர்வமாக பாடப்படுகிறது. இதனை இயற்றியவர் பாம்பன் சுவாமிகள். இவர் கந்த சஷ்டி கவசத்தின் தாக்கத்தால் அதேபோன்று பக்தியை அள்ளித் தெளிக்கும் கவசமொன்றை தானும் பாட வேண்டும் என கருதி சண்முக கவசத்தை பாடினார். 

இதுவும் முருகனுக்குரிய அறுபடை வீடுகளுக்கும் தனித்தனியே 6 கவசங்களை உள்ளடக்கியுள்ளது.

முருகனும் ஆறும்

முருகனுக்கு 6 உகந்த இலக்கமாகும். சரவணபவ மந்திரத்தில் உள்ள எழுத்துக்கள் 6, முருகனின் திருமுகங்கள் 6, அவன் வீற்றிருக்கும் படை வீடுகள் 6, சஷ்டி விரதம் நோற்கப்படும் நாட்கள் 6, குழந்தைப் பருவத்தில் முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்களின் எண்ணிக்கை 6, ஜாதகத்தில் விரோதம், கடன், ரோகம், சத்ரு போன்ற தோஷங்கள் உள்ள இடம் 6, அவற்றை தீர்க்கும் சர்வ வல்லமையுடைய கடவுள் ஆறுமுகன்... இப்படி முருகனுக்கும் 6 என்கிற இலக்கத்துக்கும் அத்தனை பிணைப்புகள் உள்ளன. 

சஷ்டி கவசம் பாடுவதால் விளையும் நன்மைகள் 

கந்த சஷ்டி கவசத்தை தினமும் பாராயணம் செய்தால் நோய்கள் அண்டாது. மனம் வாடாது. குறைவின்றி பதினாலும் பேறுகளும் பெற்று, நீண்ட ஆயுளோடு வாழலாம். நவக்கிரகங்களின் அருளாசியும் வந்து சேரும். குழந்தை பாக்கியம் கிட்டும். 

சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்ற பழமொழி வழக்கில் உண்டு. அதன் முழு அர்த்தம் என்னவென்றால், சஷ்டி நாட்களில் விரதம் இருந்தால் கருவறை பையில் (அகப்பை) குழந்தை உண்டாகும் என்பதே. அதுவும், சஷ்டியில் முருகனை வேண்டி விரதம் நோற்கும் திருமணமான பெண்களுக்கு முருகனை போன்றே குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திருநீறு பூசும்போது கடைப்பிடிக்க வேண்டியவை!

2023-11-29 12:42:00
news-image

கார்த்திகை மாதத்தில் ஏற்றப்படும் தீபத்தின் மகிமை  

2023-11-22 21:21:02
news-image

அடி பணியும் அதர்மக்காரர்களை மன்னித்து ஆட்கொள்ளும்...

2023-11-18 16:34:58
news-image

"சஷ்டியை நோக்க சரவண பவனார்...!" :...

2023-11-18 13:08:18
news-image

கந்த சஷ்டி வரலாறு....!

2023-11-14 09:25:26
news-image

சகல செளபாக்கியங்களையும் நல்கும் கந்த சஷ்டி...

2023-11-13 17:49:04
news-image

இருளகற்றி ஒளியேற்றும் நன்னாளே தீபத்திருநாள்!

2023-11-08 12:41:53
news-image

கணவனும் மனைவியும் கருத்தொருமித்து வாழ வழிகாட்டும்...

2023-11-09 17:17:21
news-image

தருமையாதீனத்தின் 27வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ...

2023-11-05 18:39:09
news-image

'நல்லூரான் கட்டியம்' புகழ் விஸ்வ பிரசன்ன...

2023-11-03 14:07:05
news-image

யானையிடம் ஏன் ஆசிர்வாதம் வாங்க வேண்டும்? 

2023-11-02 13:11:36
news-image

இறந்தவர்கள் விண்ணகத்தில் நுழைய வழிகாட்டும் மரித்த...

2023-11-02 12:12:21