இலங்கை கிரிக்கெட்டிற்கு புத்துயுர் கொடுப்பதற்கான நீண்ட காலத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ள முன்னாள் வீரர் அரவிந்த டிசில்வா ஐக்கியம் மற்றும் இணைந்து செயற்படுவதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
ஐசிசியின் நிகழ்வில் கலந்துகொண்டுவிட்டு இலங்கை திரும்பியவேளை விமானநிலையத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அரவிந்த டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணி உலககிண்ண போட்டிகளில் தோல்வியடைந்தமை குறித்த கேள்விக்கு தோல்வி என்பது உலகளாவிய அனுபவம் இலங்கை அணி மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவதற்கு ஆதரவு அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.
குற்றச்சாட்டுகளை சுமத்துவதையும் ஈகோவுடன் செயற்படுவதையும் கைவிட்டால் நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும் என அரவிந்தடிசில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கை அணி திறமை வாய்ந்தது எனினும் தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு உரிய வழிகாட்டுதல்கள் அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐசிசியின் தடை குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் ஐசிசியுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு இணக்கப்பாட்டிற்கு வரவேண்டும் எனவும் அரவிந்த டி சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM