யாழ்ப்பாணம் செம்மணி நாயன்மார்கட்டு பகுதியில் கழிவுநீரை ஊற்றி விட்டு செல்ல முயன்ற பவுசர் வண்டியொன்று அப்பகுதி மக்களால், நேற்று வெள்ளிக்கிழமை (17) மடக்கி பிடிக்கப்பட்டு சுகாதார பரிசோதகர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருநெல்வேலியில் உள்ள நட்சத்திர விடுதியொன்றின் கழிவு நீரை அகற்றும் பவுசர் வண்டியே இவ்வாறு பிடிபட்டது.
வழமையாக இவ்வாறு கழிவுகளை ஊற்றி விட்டு செல்லும் பவுசர் வண்டியை அவதானித்த அப்பகுதி மக்கள் நேற்றுக் காலை மறைந்திருந்து பவுசரில் வந்தவர்கள் கழிவு நீரை ஊற்றும் போது கையும் களவுமாக பிடித்து சுகாதார பரிசோதகரிடம் ஒப்படைத்தனர்.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெறுவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார ரீதியில் பாரிய பிரச்சினைகளை எதிர்கொள்வதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM