கிளிநொச்சியில் தென்னம்பிள்ளைகள் நடும் செயற்றிட்டத்தை ஆரம்பித்து வைத்த வட மாகாண ஆளுநர்

17 Nov, 2023 | 07:18 PM
image

நாட்டின் இரண்டாவது தென்னை முக்கோண வலயத்தில் தென்னம்பிள்ளைகளை நடும் நிகழ்வு இன்று (17) ஆரம்பிக்கப்பட்டது. 

கிளிநொச்சி - இயக்கச்சி பகுதியில் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில், தென்னம்பிள்ளைகள் நடப்பட்டு செயற்றிட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, ஒரு இலட்சம் தென்னம்பிள்ளைகளை நடும் இந்நிகழ்வு  முன்னெடுக்கப்பட்டது.

இதில், வட மாகாண ஆளுநரோடு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதிஸ்வரன், தென்னை பயிர்ச்செய்கை சபையின் தலைவர்  ஏ.வீ.கே.மாதவி ஹேரத், அரச உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். 

இரண்டாவது தென்னை முக்கோண வலயம் கடந்த செப்டம்பர் மாதம் 02ஆம் திகதி அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. 

யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு ஆகிய 03 மாவட்டங்களுடன் வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களையும் உள்ளடக்கி வடக்கு தென்னை முக்கோண வலயம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. 

சுமார் 40 ஏக்கர் நிலப்பரப்பில் 03 மாதங்களுக்குள் நான்கு இலட்சத்து 50 ஆயிரம் தென்னம்பிள்ளைகளை பயிர்ச்செய்கை செய்யும் நோக்குடன் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பயிர்ச்செய்கையாளர்களுக்கு இலவசமாக தென்னம்பிள்ளைகளை வழங்கும் இன்றைய நிகழ்வில் ஆளுநர் கூறுகையில், வடக்கில் மீள்குடியேற்றத்தின் பின்னர் வழங்கப்பட்ட தென்னம் பிள்ளைகள் தற்போது மக்களின் வாழ்வாதாரமாக மாறியுள்ளதையிட்டு தாம் மகிழ்ச்சியடைவதாக குறிப்பிட்டார். 

அதேபோல இன்று ஆரம்பிக்கப்படும் இந்த திட்டத்தினூடாக வழங்கப்படும் தென்னம்பிள்ளைகள், வட மாகாணத்தில் நலிவுற்றிருக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த எழுந்து நிற்கும் என ஆளுநர் நம்பிக்கை வெளியிட்டார். 

எவ்வாறாயினும் தென்னை பயிர் செய்கையாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் நன்கறிந்துள்ளதாகவும் அவர் கூறினார். 

இதேவேளை, நட்புசார் விவசாயத்தை விஸ்தரிக்கும் நோக்கில் எதிர்வரும் ஜனவரி மாதம் புதிய கையடக்க தொலைபேசி செயலி ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் மேலும் கூறினார். 

வடக்கில் விவசாய முதலீடுகளை மேற்கொள்ள விரும்புவோருக்கான அனைத்து ஒத்துழைப்புகளும் வழங்கப்படும் என்று கூறிய ஆளுநர், தென்னை முக்கோண வலயத்தை வட மாகாணத்தில் ஆரம்பிக்க ஆலோசனை வழங்கிய ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை அச்சு ஊடக கல்வி நிலையத்தின்...

2023-12-01 12:05:59
news-image

மனித உரிமைகள் உலகளாவிய அமைப்பின் இலங்கைக்கான...

2023-12-01 07:36:02
news-image

43 ஆவது தேசிய இளைஞர் விருது...

2023-11-30 15:41:31
news-image

'யாழில் மலையகத்தை உணர்வோம்' : முதல்...

2023-11-30 13:37:28
news-image

59ஆவது ஆண்டில் தடம் பதிக்கும் திருமறைக்...

2023-11-30 13:48:41
news-image

கதிர்காமம் ஸ்ரீ தெய்வானை அம்மன் ஆலயத்தில்...

2023-11-30 12:19:31
news-image

மன்னார் பேசாலை புனித வெற்றி நாயகி...

2023-11-30 11:52:12
news-image

'மலையக வரலாறும் ஈழத்து இலக்கியமும்' :...

2023-11-30 11:23:08
news-image

மலையகம் 200 : "யாழில் மலையகத்தை...

2023-11-30 10:38:00
news-image

மன்னாரில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் பாடசாலை...

2023-11-29 18:01:37
news-image

உலகத் தமிழர்கள் கொண்டாடும் கலைஞர் நூற்றாண்டு...

2023-11-29 20:58:03
news-image

பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி கொழும்புக் கிளையின்...

2023-11-29 14:27:58