மறைந்த டீ.ஏ. ராஜபக்ஷவின் 56ஆவது ஞாபகார்த்த பேருரை

18 Nov, 2023 | 12:12 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

முன்னாள் அமைச்சர் டீ.ஏ ராஜபக்ஷவின் 56ஆவது ஞாபகார்த்த பேருரை நிகழ்வு ராஜபக்ஷ ஞாபகார்த்த கல்வி, கலாசார, சமூக, சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் கடந்த வியாழக்கிழமை (16) கொழும்பில் அமைந்துள்ள இலங்கை மன்றத்தில் இடம்பெற்றது.

களனி பல்கலைக்கழகத்தின் தொல்பொருளியல் பற்றிய சிரேஷ்ட பேராசிரியர் கலாநிதி ராஜ் சோமதேவவினால் 'இலங்கையின் பண்டைய நிர்வாக கோட்பாடுகள்' எனும் தலைப்பில் இந்த ஞாபகார்த்த பேருரை நடத்தப்பட்டதுடன், இதற்கு பெங்கமுவே ஸ்ரீ தம்மதின்ன நாயக்க தேரர் தலைமை வகித்தார்.

இவ்விழாவில் முன்னாள் அமைச்சர் டீ.ஏ ராஜபக்ஷவின் புதல்வர்களான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பஷில் ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ, பிரதமர் தினேஷ் குணவர்தன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, முன்னாள் ஜனாதிபதியின் பாரியார் ஸ்ரீரந்தி ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆளுநர்கள், முன்னாள் அமைச்சர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

மங்கல விளக்கு ஏற்றப்பட்டு இந்த நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டதுடன், பின்னர் முன்னாள் அமைச்சர் டீ.ஏ ராஜபக்ஷவின்  திருவுருவச் சிலைக்கு பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் மலர்மாலை சூட்டப்பட்டது. 

இதன்போது அன்னாருக்காக ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

டீ.ஏ. ராஜபக்ஷ என்றும் அழியாத நினைவலைகளை  நாட்டில் நிலைநிறுத்தி இன்றைக்கு 56 வருடங்கள் கடந்துள்ளது.

டீ.ஏ. ராஜபக்ஷவின் அரசியல் பிரவேசம் சுயவிருப்பத்தின் பேரில் நிகழ்ந்ததல்ல. அவரது சகோதரரின் மரணத்தினால் ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தை நிரப்ப முடியாமல் ஏற்பட்டதாகும்.

மக்கள் விடுத்த பல்வேறு கோரிக்கைகள் அவரின் அரசியல் பிரவேசத்துக்கு காரணமாயிற்று. தமது பிள்ளைகள் பள்ளி செல்லும் பருவத்தில் காணப்பட்ட போதிலும் கிருபாத்துவ பிரதேசத்தைச் சேர்ந்த அனைத்து பிள்ளைகளுக்காகவும் டீ.ஏ. ராஜபக்ஷ வேட்புமனுவில் கையொப்பமிட்டார். அடுத்து அரசியல் சபையில் உள்நுழைந்தார். 

டீ.ஏ. ராஜபக்ஷ கடும் வெப்பத்தில் துன்புற்ற விவசாயிகளுக்கு நீரையும், பயிருக்கு தேவையான நிலத்தையும் வழங்கி நாட்டின் பாரம்பரியத்தை பாதுகாத்தார். 

இலங்கை அரசியல் வரலாற்றில் என்றும் போற்றப்படும் அரசியல் தலைமையின் இந்த ஞாபகார்த்த நிகழ்வு வரலாற்று சிறப்பு மிக்கதாகும்.

இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷவினால் ஞாபகார்த்த நிகழ்வின் பேருரையாளர் களனி பல்கலைக்கழகத்தின் தொல்பொருளியல் முதுகலை பட்டப்படிப்பு பீடத்தின் விரிவுரையாளர் பேராசிரியர் தனஞ்ஜய கமலத் பதக்கம் அனுவித்து கௌரவிக்கப்பட்டார்.

இலங்கையின் பொருளாதாரத்தை புத்துயிராக்குவதற்கும், அதன் அதிகாரத்துவத்தை சீர்த்திருத்துவதற்கும் எதிர்கால பொருளாதார ஒத்துழைப்புகளை முடிவெடுக்கும் செயல்முறைகளை மேம்படுத்துவதற்கும் முன்னணி பங்காளிகளாக ராஜபக்ஷக்கள் திகழ்கின்றனர் என ஞாபகார்த்த பேருரை நிகழ்வில் உரையாற்றிய களனி பல்கலைக்கழகத்தின் தொல்பொருளியல் பட்டப்பின்படிப்பு நிறுவனத்தின் பேராசிரியர் தனஞ்ஜய கமலத், இலங்கை - இந்திய உறவுகள் வரலாற்றுக்கு முந்தைய, ஆரம்ப வரலாற்று மற்றும் வரலாற்றுக் காலம் வரை தொடர்பில் நீண்ட விசேட உரையாற்றப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

APIITயின் ரோட்ராக்ட் கழகத்தின் 3ஆவது ஆண்டு...

2025-01-24 15:49:44
news-image

இந்தியாவின் 76 ஆவது குடியரசு தினத்தை...

2025-01-23 21:09:21
news-image

யாழ். பல்கலையில் 'த நெயில்' சஞ்சிகை...

2025-01-23 18:28:12
news-image

யாழ். பல்கலைக்கழக கலைப்பீடத்தின் 4ஆவது இளங்கலை...

2025-01-23 17:53:48
news-image

செலான் வங்கியின் சூரியப்பொங்கல்

2025-01-22 12:52:42
news-image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மாணவர் ஆய்வு...

2025-01-22 09:05:55
news-image

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்...

2025-01-21 17:48:32
news-image

புனித குர்ஆன் மனனப் போட்டியின் இரண்டாம்...

2025-01-21 11:13:46
news-image

'அடையாளம்' கவிதை நூல் வெளியீடு

2025-01-20 15:49:31
news-image

கொழும்பு இந்து மகளிர் சங்கத்தினர் நடத்திய...

2025-01-20 15:24:39
news-image

காங்கேசன்துறை தையிட்டி கணையவிற் பிள்ளையார் ஆலய...

2025-01-20 13:13:22
news-image

கொட்டாஞ்சேனை அருள்மிகு ஸ்ரீ வரதராஜ விநாயகர்...

2025-01-19 20:03:17