2519 தாதியர்கள் அரச சுகாதார சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டனர் !

17 Nov, 2023 | 06:43 PM
image

(எம்.மனோசித்ரா)

பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் , சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரணவின் பங்குபற்றலுடன் இன்று வெள்ளிக்கிழமை (17)  அலரிமாளிகையில் இடம்பெற்ற நிகழ்வில் 2519 தாதியர்கள் அரச சுகாதார சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டனர். பிரதமர் மற்றும் அமைச்சரால் குறித்த தாதியர்களுக்கு நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.

நிழ்வில் உரையாற்றிய சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண, தாதியர் தொழிலைப் பொறுத்தமட்டில், எனது வாழ்நாளில் இலஞ்சம், ஊழல், மோசடி, முறைகேடுகள் பற்றி எந்த முறைப்பாடுகளையும் கேட்டதில்லை. உலகிலுள்ள சகல தொழில்களிலும் தாதியர் என்பது மறுக்க முடியாத ஒரு சிறந்த தொழிலாகும். அந்தச் சிறப்பைப் பாதுகாப்பது உங்கள் பொறுப்பாகும்.

1948 ஆம் ஆண்டில், பதிவு செய்யப்பட்ட வைத்தியர்கள் உட்பட 400 வைத்தியர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட எமது சுகாதாரத்துறையில் சுமார் 300 தாதியர்கள் இருந்தனர். 75 வருடங்களில் இலங்கையின் சுகாதாரத் துறையானது 43,000 தாதிகள், 23,000 வைத்திய அதிகாரிகள் மற்றும் 8,000 துணை வைத்தியர்கள் உட்பட 100,000 பேரைக் கொண்ட பாரிய துறையாக வளர்ச்சியடைந்துள்ளது.

இத்துறை சிறந்த சேவைகளை வழங்கும் தொழில்சார் சேவையாக மாறியுள்ளதுடன், அதன் பரிணாம வளர்ச்சியுடன், குறைந்த செலவில் உலகில் சிறந்த தரமான சுகாதார சேவைகளை வழங்கும் மத்திய நிலையமாக இன்று இலங்கை அடிக்கடி உலக சுகாதார ஸ்தாபனத்தினால் குறிப்பிடப்படுகின்றது. சேவை மற்றும் சுகாதார ஊழியர்களின் ஒத்துழைப்பு அந்த பெருமைக்கு உரியதாகும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீரில் மூழ்கி இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

2024-12-10 10:41:56
news-image

மது போதையில் அநாகரீகமாக செயற்பட்ட பொலிஸ்...

2024-12-10 10:31:39
news-image

ரயில் - மோட்டார் சைக்கிள் மோதி...

2024-12-10 10:17:11
news-image

வலம்புரி சங்குகளுடன் இருவர் கைது!

2024-12-10 10:06:38
news-image

யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன்...

2024-12-10 10:03:38
news-image

இறக்குமதி அரிசிக்கான விலையை நிர்ணயித்து வர்த்தமானி...

2024-12-10 09:16:17
news-image

இன்றைய வானிலை 

2024-12-10 06:56:10
news-image

உதயங்க வீரதுங்க - கபிலசந்திரசேனவிற்கு அமெரிக்கா...

2024-12-10 06:19:13
news-image

உரிய முறைக்கு புறம்பாக எவருக்கும் மதுபான...

2024-12-10 02:33:23
news-image

பெருவணிகர்கள் அரிசி உற்பத்தியை வியாபாரமாக்குவதற்கு இடமளிக்காதீர்கள்...

2024-12-10 02:14:11
news-image

அமைச்சரவையில் முஸ்லிம்கள் பிரதிநிதித்துவம் உள்வாங்கப்படாமை குறித்து...

2024-12-10 02:11:03
news-image

நீர் மின் உற்பத்தி அதிகரித்துள்ளதால் மின்சாரசபைக்கு...

2024-12-10 02:07:37