பிரபல பொப் இசைப் பாடகர் எம்.எஸ். பெர்னாண்டோவின் பாடல்களை அனுமதியின்றி பாடியமை தொடர்பான வழக்கில் எம்.எஸ்.பெர்னாண்டோவின் மகனுக்கு மூன்று லட்சம் ரூபா இழப்பீடு தொகைசெலுத்துமாறு பாடகர் எம்.ஜி. தனுஷ்கவுக்கு  கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மார்ச் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் குறித்த பணத்தை செலுத்துவதாக பாடகர் எம்.ஜி. தனுஷ்க இணக்கம் தெரிவித்துள்ளார்.

எம்.எஸ்.பெர்னாண்டோவின் மகன் சரத் பெர்னாண்டோ மேற்கொண்ட  முறைப்பாட்டின் அடிப்படையில் எம்.ஜி. தனுஷ்க கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.